“வீரமக்கள் தின” நிகழ்வில் பங்கேற்கும் முகமாக, சூரிச் பயணமானார் “புளொட்” தலைவர்..!

Read Time:2 Minute, 41 Second

004cநாளைக்காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அவரது பாரியார் திருமதி மீனா சித்தார்த்தன் அவர்களும் இன்றுகாலை சூரிச் நோக்கிப் பயணமானார்கள்.

நாளை ஞாயிறன்று காலை 8.00மணியளவில் தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப் போட்டிப் பரீட்சைகள் இடம்பெறவிருப்பதுடன், பிற்பகல் 2மணியளவில் ஆரம்பமாகி நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின்போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.

25ஆவது வீரமக்கள் தின நிகழ்வின் போது மலரஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளதுடன், இதன்போது போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த “அனைவருக்கும்” புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது அஞ்சலியினை செலுத்தி, உரையாற்றவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வின் போது இடம்பெறவுள்ளன.

தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இம்முறை நடைபெறவிருக்கும் 25ஆவது வீரமக்கள் தின நிகழ்விலும் புளொட்டின் வெளிநாட்டுக் கிளைகளின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்கவுள்ளனர்.

சுவிஸ் கிளை – தொடர்புகளுக்கு- 076.5838410 079.6249004 079.8224153 077.9485214

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!
Next post புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர்!!