கூகுள் இணையதளத்துக்கு இணையாக, மின்னல் வேகத்தில் பதிலலிக்கும் 6 வயது சிறுவன் ‘கூகுள் பாய்’! (படங்கள்)
கூகுள் இணையதளத்துக்கு இணையாக, மின்னல் வேகத்தில் பதிலலிக்கும் 6 வயது சிறுவன் ‘கூகுள் பாய்’! (படங்கள்)….
அரியானாவைச் சேர்ந்த, ஆறு வயது சிறுவன் ஒருவன் கூகுள் இணையதளத்துக்கு இணையாக, அன்றாட நிகழ்வுகள், அரசியல், பொது அறிவு குறித்த, எந்த கேள்வியை கேட்டாலும் சற்றும் யோசிக்காமல், அடுத்த விநாடியே மின்னல் வேகத்தில் பதில் அளிக்கிறான். அந்த சிறுவனின் பெயர் கவுடில்யா.
நாடுகளின் பெயர், மொழி, நிலப்பரப்பு, மலை, கடல், கிரகங்கள், மக்கள் தொகை என எந்த கேள்விகளுக்கும், அதிரடியாக பதில் அளித்து அசத்துகிறான். இதனால், இவனை, ‘கூகுள் பாய்’ என, செல்லமாக அழைக்கின்றனர்.
அவனது அசாத்திய திறமையை பார்த்த அவரது தந்தை சதீஷ் சர்மா ‘கூகுள் பாய் அகாடமி ஃபார் எக்ஸலென்ஸ்’ என்ற பெயரில் பயிற்சி அகாடமி ஒன்றை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் துவங்கியுள்ளார். இங்கு, அதிசய சிறுவன் கௌடில்யா தன் வயதை ஒட்டிய சிறுவர்களுக்கு ஞாபக சக்தி மற்றும் யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கிறான். அவர்களுக்கு கல்லூரி பேராசிரியரை போல் விளக்கமும் அளிக்கிறான்.
இந்த பயிற்சி அகாடமியில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஷார்கட்களும் சொல்லித்தரப்படுகிறது. முதல் பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.
இதில் சேரும் மாணவர்கள், புத்திசாலித்தனத்தை நிரூபிக்கும் ஐ.க்யூ டெஸ்ட், கேபபிலிட்டி மற்றும் இன்ட்ரெஸ்ட் லெவல்ஸ் ஆகிய தேர்வுகளை கடந்தே அட்மிஷன் பெற முடியும்.
அப்படி, அந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாதவர்களுக்கும் விவாதம், புத்திக்கூர்மை, வானியல், சாட்டிலைட் சயின்ஸ், புவியியல், கணக்கு, ஆங்கில இலக்கணம், ஹிந்தி இலக்கணம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கிறார்கள்.
6 வயது சிறுவனான கூகுள் பாய் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை போலவே அதீதமான ஐ.க்யூ லெவலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating