போட்டோ எடுக்க பயப்படும் கிராமம்.. “அப்புச்சி கிராமம்”

Read Time:1 Minute, 40 Second

005gவான்வெளியிலிருந்து எரிகல் விழும் என்ற பீதியால் மக்கள் மத்தியில் ஏற்படும் மனமாற்றங்களை மையமாக வைத்து உருவாகிறது அப்புச்சி கிராமம்.

அதேபோல் கிராமத்தில் எரிகல் விழும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது முண்டாசுப்பட்டி.

இப்பட இயக்குனர் ராம்குமாரிடம் கேட்டபோது, எரிகல் விழுவதை மையமாக வைத்து அப்புச்சி கிராமம் கதை பின்னப்பட்டுள்ளது.

ஆனால் நான் இயக்கும் முண்டாசுப்பட்டியில் எரிகல் விழுவதால் ஏற்படும் மூட நம்பிக்கையும், கிராமத்தில் யாரையாவது போட்டோ எடுத்தால் அவர்கள் சீக்கிரம் இறந்து விடுவார்கள் என்ற பழங்கால மூட நம்பிக்கையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் விஷ்ணு, நந்திதா, ஆனந்தராஜ், காளி, ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சி.வி.குமார் தயாரிக்கிறார்.

இதன் ஷூட்டிங் முழுவதும் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. தற்போது கிராமம்தோறும் செல்போன் வந்துவிட்டதால் போட்டோ பயம் என்பது மாறிவிட்டது.

எனவே கதைக்களம் 1980களில் நடப்பதுபோல் சித்தரிக்கப்படுகிறது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்பியின் மூக்கை கடித்து துண்டாக்கிய அண்ணன்..
Next post (PHOTOS) இளம் பெண்கள் மூவரின் துணிகர ‘டொப்லெஸ் சுற்றுலா’..