ரஜினி கட்–அவுட்டுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம்: பட்டாசு வெடித்தனர்..

Read Time:4 Minute, 6 Second

74ea9b49-380a-4828-8f4c-85f5d9b9492d_S_secvpfரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் விழாவாக கொண்டாடினார்கள். தியேட்டர்களில் ரஜினியின் உயரமான கட்–அவுட்கள் அமைத்து இருந்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

சென்னை காசி தியேட்டரில் காலை 8 மணிக்கு முதல் காட்சி துவங்கியது. ரசிகர்கள் ஆரவாரத்தோடு படம் பார்த்தனர். ரஜினி வரும் போதெல்லாம் விசில் அடித்தனர். நடனம் ஆடினார்கள். தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த ரஜினி கட்–அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். பட்டாசுகளும் வெடித்தார்கள்.

ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி, சூளைமேடு கே.ரவிச்சந்திரன், ரஜினி பித்தன், ரஜினி ஆனந்தன், சைதை ஜி.ரவி, சைதை ஆர்.முருகன், க.எழில்அரசு, வீரா ஜி.சம்பத்குமார், ரஜினி கேசவன், பட்டாணி ஜி.மணி, மயிலை டி.முருகன், நியூஸ் பேப்பர் க.சீனு, நந்தம்பாக்கம் எஸ்.சண்முக பாண்டியன், பழக்கடை பன்னீர் செல்வம், செட்டி தோட்டம் பி.செல்வம், நந்தனம் டி.சுந்தர், கே.கே.நகர் சாதிக்பாட்ஷா, எம்.ஜி.ஆர். நகர் லட்சுமணன், எம்.கே.எஸ்.முருகன், கே.முத்துலிங்கம், ரஜினி முருகன், சி.வி.வெங்கடேசன், அம்பத்தூர் ஐ.அப்துல், மணலி ஜி.வெங்கட், தாம்பரம் ஏ.முருகன், ரஜினிரவி, சைதை எஸ்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அம்பத்தூர் முருகன் தியேட்டரில் ‘கோச்சடையான்’ படம் பார்க்க வந்தவர்களுக்கு அம்பத்தூர் ஐ.அப்துல் இனிப்பு வழங்கினார். கொடுங்கையூர் என்.ரஜினி ஆனந்தன், சைதை ஜி.ரவி, வீரா சம்பத், சிவகங்கை கவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேலத்தில் ரசிகர்கள் ரஜினி உருவம் பொறித்த பனியன் அணிந்து தியேட்டருக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் ரஜினி வேடமணிந்த ஒருவர் குதிரையில் வந்தார். அவரை தொடர்ந்து ரசிகர்கள் பால், சந்தனம், மஞ்சள் குடம் எடுத்து கொண்டு வந்தனர்.

பின்னர் தியேட்டர் முன்பு வைத்திருந்த ரஜினியின் கட்–அவுட்டுக்கு பால், சந்தனம், மஞ்சள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று தியேட்டர் முன்பு கிடா வெட்டப்பட்டது. மேலும் 101 தேங்காய், 5 பூசணிக்காய் உடைக்கப்பட்டது. ‘கோச்சடையான்’ திருவிழா என்று எழுதப்பட்ட 5 கிலோ கேக்கை வெட்டினர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

நாகர்கோவிலில் கார்த்திகை தியேட்டர் முன்பு கொண்டாட்டங்கள் நடந்தது. இதில் ரசிகர்கள் ரஜினியின் கட்–அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் சூடம் ஏற்றி வழிபட்டனர். மேலும், பட்டாசுகள் வெடித்து மகிழந்தனர். தியேட்டர் முன்பு ரஜினியின் முகமூடி அணிந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்தும், விசிலடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் சிறுமியை சிறை வைத்து, 10 வருடம் கற்பழித்த கொடூரன்..
Next post (PHOTOS) அனைத்தையும் போல காதலனையும் பகிர்ந்து கொண்ட இரட்டையர்கள்..