லண்டனில் ரூ.1400 கோடிக்கு விற்பனையான பிளாட்..

Read Time:1 Minute, 38 Second

5069d3df-0fc5-477a-91e6-7c22c6d689fd_S_secvpfலண்டனின் தெற்கு கென்சின்ட்டன் அருகில் உள்ள நைட்பிரிட்ஜ் பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு அதிநவீன ‘ஃபிளாட்’, லண்டன் நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அதிக தொகையான 140 மில்லியன் பவுண்டுகளுக்கு (இந்திய மதிப்புக்கு சுமார் ஆயிரத்து நானூறு கோடி) விலை போய் சாதனை படைத்துள்ளது.

இந்த விபரம் லண்டன் மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விற்பனையையடுத்து, பிரபல செல்வந்தர்கள் வசிக்கும் இப்பகுதியில் உள்ள நிலம் மற்றும் வீடுகளின் விலை தாறுமாறாக உயரக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அப்பகுதியின் நில மதிப்பு சதுரடிக்கு சுமார் 10 ஆயிரம் பவுண்டுகள் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து, இன்னும் வேலைபாடுகள் முழுமையாக நிறைவடையாத அந்த ஃபிளாட்டை வாங்கியது யார்? என்ற முழுவிபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.

எனினும், அந்த நபர் ரஷ்யா அல்லது உக்ரைன் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரசவத்திற்குச் சென்ற, கர்ப்பிணிப் பெண்ணின் குடலை வெட்டிய வைத்தியர்கள்!
Next post பிரச்சினைக்கு எல்லாம், சிம்பு தான் காரணம் -ஹன்சிகா அம்மா