“த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்; சுமந்திரனிடம் பேச்சு வாங்கி, அழுது வடித்த அனந்தி!!”

Read Time:16 Minute, 47 Second

ananthi (3)தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோருக்கிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம் பெற்ற நிலையில், சுமந்திரன் கடும் தொனியிலான  சரமாரியான விமர்சனங்களை முவைத்தார். இதனால் அனந்தி சசிதரன் பெரும் கலக்கமடைந்தார்.

திருகோணமலைக்கூட்டம் தொடங்கியது முதல் சம்பந்தன் கட்சி தலைமையின் அனுமதியின்றி அனந்தி ஜெனீவா சென்றமை மற்றும் அங்கு அவர் ஆற்றிய உரைகள் தொடர்பில் திரும்ப திரும்ப பேசியவாறிருந்தார்.

இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்களிற்கு மதிய உணவு வேளையில் அறிக்கையொன்றினை தயார் செய்து கொண்ட அனந்தி பதிலளிக்கும் வகையில் பேசியிருந்தார். போதிய அரசியல் மேடைப்பேச்சு அனபவமற்ற அவர் தான் தயாரித்து வைத்திருந்த விளக்கத்தினை வாசிக்க முற்பட்டார்.

அவ்வேளையில் குறுக்கிட்ட சுமந்திரன் “கஜேந்திரகுமார் தந்தவற்றை இங்கு வாசிக்க வேண்டாமென” தெரிவித்தார். அதனை பொருட்படுத்தாமல் அனந்தி தொடர்ந்தும் வாசிக்க முற்பட மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவனும் அங்கு சுமந்திரனுடன் இணைந்து அனந்தியை அவதூறாக பேச முற்பட்டார்.

அதற்கு பதிலளித்த அனந்தி ஜெனிவா விவகாரம் உங்களிற்கு அரசியலாகலாம். எனக்கோ அதுவே வாழ்க்கைப்பிரச்சினை. காணாமல் போன எனது கணவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனேயே அங்கு போனேன் என கூறிய அழுதவாறு உரையினை நிறுத்தி அமர்ந்துவிட்டார்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போது பெரும்பாலான கூட்டமைப்பு தலைமைகள் மௌனம் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனந்திக்கு  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதி  கொடுத்த  உரையிது தான்.…

ஜெனீவாவில் நிறைவேறியுள்ள இலங்கை தொடர்பான மனித உரிமை அறிக்கை தொடர்பாகவும் தென்னாபிரிக்க நகர்வு தொடர்பானதுமான நிலைப்பாடு

ஐ.நா.வின் மனித உரிமை அவையில் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு குறித்தும் சர்வதேச சமூகம் எவ்வாறான முறையில் எமது மக்கள் மீதும் மண் மீதும் தொடரும் கட்டமைப்புரீதீயான இன அழிப்பைப் பற்றியும் அவையின் அமர்விலும்இ என்னால் பங்கெடுக்கக்கூடியதாகவிருந்த ஓர நிகழ்வுகளிலும் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

இங்கே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பயங்கரமான கைதுகள், சுற்றிவளைப்புகள், மனித உரிமைக்காகக் குரல்கொடுப்போர் மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பயங்கரமான நடவடிக்கைகள் குறித்தும்இ முக்கியமாக காணாமற்போயிருப்போரின் உறவுகள் சார்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தேன்.

உண்மையானதொரு  சர்வதேச விசாரணையை நோக்கிய நகர்வாக மனித உரிமைகள் அவையின் நிலைப்பாடு அமையவேண்டும்.

இன அழிப்பு தொடர்பான குற்றச்சாட்டை  இனியும்   நிராகரித்துக்கொண்டு செல்லாமல்,  தட்டிக்கழிக்காமல் நேர்மையான,  சுயாதீனமான,  சர்வதேச விசாரணை ஒன்று போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்,  இன அழிப்பு குற்றம் என்ற மூன்று விடயங்களையும் உள்ளடக்கியதாக  அமையவேண்டும்  என்ற  எமது  மக்களின் நிலைப்பாட்டை நான்கு தடவை சபையின் அமர்வில் நேரடியாக முன்வைத்தேன்.

ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் வட கிழக்குக்கு வந்து சந்திப்புகளை மேற்கொண்டபின்னர்,  கொழும்பில் வைத்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய வீடியோ நேர்காணலில் தான்  வடக்குக்கும் கிழக்குக்கும்  வருகை தந்த போது இன அழிப்பு என்ற சொல்லை தனக்கு எவரும் குறிப்பிடவில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்த கவலை பல மட்டங்களில் இருந்தும்  வெளியாகியிருந்தது. குறிப்பாக மலேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் வெளிப்படையாகவே அம்மையாரின் இந்தக் கூற்று பற்றிய விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் வடமாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஒரு தீர்மானம் ஜனநாயக ரீதியாக தெரிவான பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

இந்தத் தீர்மானம் திரிபுக்குள்ளாக்கப்பட்டாலும் இன அழிப்புக்கு ஒப்பான குற்றம் குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்ற அளவில் முதல்வரால் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்ல இந்த விடயம் தொடர்பாக ஜெனிவா சென்று கருத்தை முன்வைக்கும் ஆணையும் எனக்குத் தரப்பட்டிருந்தது.

ஜெனிவா சென்று இரு முறை நேரடியாக பார்த்தபோது தான் அங்கு எவ்வாறு விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை ஆழமாக புரிந்துகொள்ள முடிந்தது.

உண்மையில் ஒட்டுமொத்தமான தமிழ்த் தேசிய இனம் தனது கருத்தை சரியான முறையில் கண்கூடான முறையில் முன்வைப்பதற்கான ஜனநாயக வெளியை நாம் ஏன் இதுவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வியே அங்கு சென்று நிலைமையை அவதானித்தபோது எனக்கு ஏற்பட்டது.

அதைச் சரியாகச் செய்யத் தவறினால் வரலாற்றுக்குத் தவறிழைத்தவர்கள் ஆவோம் என்பதைப் புரிந்து கொண்டு வரலாற்றுக்கு நேர்மையாக எமது தேசிய இனத்தின் கருத்தை அங்கு பதிவு செய்தேன்.

ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட நகலில் தமிழ் என்ற சொல்லே கிடையாது.

சிறிலங்கா ஒற்றையாட்சி அரசுக்கும் ஈழத்தமிழ்த் தேசிய இனத்திற்கும் இடையிலான தேசிய இனப் பிரச்சனை குறித்த தெளிவின்றி அந்த நகல் வரையப்பட்டிருந்தாலும் அதில் ‘இராணுவ-விலக்கு’என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதுவும் பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

இது குறித்த பகிரங்கமான அதிருப்தியை நாம் வெளியிடத் தவறுவோமென்றால் வரலாற்றுக்குத் தவறிழைத்தவர்களாகவே நாம் அடையாளங்காணப்படுவோம்.

அதேவேளை ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தின் ஊடான ஒரு சர்வதேச பொறிமுறையுடனான விசாரணைக்கான தேவை இருக்கிறது என்பதை இந்த தீர்மானம் அங்கீகரித்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு அதை மேலும் பலப்படுத்துவத்றகாவன செயற்பாடுகளிலும் நாம் ஈடுபடவேண்டும்.

இந்தத் தீர்மானத்தையே சிறிலங்கா அரசு அப்பட்டமாக நிராகரித்திருக்கிறது. இன அழிப்பு குறித்த விசாரணை என்று சொன்னாலும் சிறிலங்கா அரசு நிராகரிக்கும் அது இல்லாத எந்த ஒரு சர்வதேச விசாரணையையும் அது நிராகரிக்கும் என்றால் தமிழ்த் தரப்பில் இன அழிப்பு என்ற அரசியற் கோரிக்கையை முன்வைக்காது தவறுவதை இனியும் எந்தவகையிலும் எவரும் நியாயப்படுத்த முடியாது.

இந்த நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாம் இனியும் தெளிவாகவும் பகிரங்கமாகவும் நேர்மையாகவும் கூறத் தவறினால் அது நாம் எமது தேசிய இனத்திற்கு இழைக்கும் மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

தேர்தல் காலத்திலேயே மழுங்கடித்த வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி தேர்தலுக்குப் பின்னர் எமது அரசியல் அரங்குகளில் அதை மேலும் நீர்த்துப்போகச் செய்து இறுதியில் நடைமுறையில் மேலும் நீர்த்துப்போகவைக்கும் செயற்பாடு எமது தேசிய இனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செயலாகிவிடும்.

எனவே எனது முதலாவது கோரிக்கை: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆணித்தரமாக இன அழிப்பு மீதான சர்வதேச விசாரணையைப் பகிரங்கமாகக் கோரவேண்டும். இந்தக்கோரிக்கைக்குப் பின்னரே எமது அடுத்த கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும்.

எனது இரண்டாவது கோரிக்கை: ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படக்கூடிய விசாரணையை சிறிலங்கா அரசு மறுப்பது மட்டுமல்லஇ இராணுவக் கெடுபிடிகளை நடைமுறைப்படுத்தி எந்த ஒரு சாட்சியமும் சுயாதீனமான முறையில் பயமின்றி எந்த ஒரு விசாரணைப் பொறிமுறைக்கும் ஒத்துழைக்கமுடியாத சூழல் நிலவுவதால்,  சர்வதேச சமுகம் இனியும் காலம் தாழ்த்தாது அதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான பொறிமுறைக்கு நகரவேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவேண்டும்.

எனது மூன்றாவது கோரிக்கை: ஈழத் தமித் தேசிய இனத்துக்கு இன்று இருக்கும் ஒரு நம்பிக்கை தமிழ்நாட்டு அரசும் அதன் முதல்வரும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் இனியாவது மனச்சுத்தியுடன்  இந்த அரசியல் உறவைப் பலப்படுத்துவதாக அமையவேண்டும்.

இது குறித்த சுய விமர்சனத்தை நேர்மையோடு அணுகும் தன்மை கொழும்பை மையப்படுத்திச் சிந்திக்கும் ஒரு வட்டத்தினால் தடுக்கப்படுகிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் பலமாக இருக்கிறது.
எனவே இனியாவது இந்த ஒளித்து மறைத்து செயற்படும் அரசியலைத் தவிர்த்து நேர்மையானஇ வெளிப்படையான கருத்தை முன்வைக்கவேண்டும்.

எனது நான்காவது கோரிக்கை: ஜெனிவா தீர்மானத்தை நடைமுறையில் பலமிழக்கச் செய்யும் ஒரு காரியம் வடக்கிலும் கிழக்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இராணுவ ஆட்சி.

இது இலங்கைத்தீவின் உள்ளிருக்கும் நிலை. இதே போல சர்வதேசப் பரப்பில் இந்தத் தீர்மானத்தின் செல்நெறியை வேறுதிசைக்குத் திருப்பும் ஒரு நகர்வாகவே பூடகமாக முன்வைக்கப்பட்டுவரும் தென்னாபிரிக்க நகர்வு எமது மக்களாலும் எமது மக்களில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நட்புச் சக்திகளாலும் பார்க்கப்படும்.

அதிலும் குறிப்பாகஇ மக்களுக்குத் தெரியப்படுத்தப்படாத பூடகமான நகர்வுக்காக மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகும் நலிவு அரசியலை கடைப்பிடிக்கக்கூடாது.

எந்த சர்வதேச தரப்போடும் நாம் பேசலாம். பேச வேண்டும். ஆனால்இ அதைச் செய்யும் போது எமது பகிரங்க நிலைப்பாடு குறித்து நாம் தெளிவாக இருந்தவாறு அதைச் செய்யவேண்டும். ஒரு நிலைப்பாட்டை இன்னொரு நிலைப்பாடு முரண்படுத்தும் நிலையை அப்போது தான் நாம் தவிர்க்கலாம்.

ஆகவே எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்த நிலையில் எமது நிலைப்பாடு அமையவேண்டும்.

எனது ஐந்தாவது கோரிக்கை: வடக்கு மாகாணத்துக்கு ஒப்பாக கிழக்கு மாகாணத்திலும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புச் செயற்பாடு நடைபெறுகிறது. இது குறித்து சர்வதேச தரப்புகள் தொடக்கம் தமிழ்த் தரப்புகள் வரை குறித்த கவனம் செலுத்த முடியாதிருக்கின்றன.

இது தொடர்பான தெளிவான ஒரு செயற்பாடு அவசியம். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அனைத்து உள்ளூராட்சி மாகாண சபை பாராளுமன்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி சில முடிவுகளை வட கிழக்கை சமமாக மையப்படுத்திய நிலையில் மேற்கொள்ள வேண்டும்.

எனது ஆறாவது கோரிக்கை: ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அலுவலகம் தனது நடவடிக்கையை முன்னெடுக்கும் போது தமிழ்மக்களாகிய நாம் அதற்கு எந்த வகையில் சரியான ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் முன்வைப்பது என்ற விடயத்திற்கான ஒரு செயற்குழுவையும் அதற்கான செயற்பாட்டை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்தும் உடனடியான முடிவை மேற்கொள்ளவேண்டும்.

காணாமல் போன எனது கணவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையுடனேயே அங்கு போனேன் என கூறிய அழுதவாறு உரையினை நிறுத்தி அமர்ந்துவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானியின் சாதுர்யம், உயிர் காக்கப்பட்ட 93 பயணிகள்
Next post சுண்டெலி அளவான அரியவகை மான், 100 கிராம் நிறையுடன் ஸ்பெய்னில் பிறந்தது