தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம்: சீமான் பேச்சு

Read Time:1 Minute, 55 Second

seeman-2காங்கிரசுடன் கடைசி வரை இருந்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம், தமிழர்களுக்கு துணை நிற்காத காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடிப்போம் என திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அனுப்பினோம். இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அவர்கள் யாரும் பேசவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும் அவர்கள் பேசவில்லை.

எல்லா கொடுமைகளுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. துணை நின்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் சேராமல் தி.மு.க. விலகி இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்திருந்தால் தி.மு.க. தொண்டனே அக்கட்சியை தோற்கடித்து இருப்பான். அது தெரிந்து தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கருணாநிதி வெளியேறினார்.

தமிழர்களுக்கு துணை நிற்காத காங்கிரஸ், பா. ஜனதா ஆகிய தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் வேலை இல்லை. அவர்களை விரட்டியடிப்போம். காங்கிரஸ் கட்சியுடன் கடைசி வரை இருந்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸியாகவே நடிப்பேன் -ஷகீலா அடம்
Next post டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?