விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணியில் சுடப்பட்டார்!

Read Time:3 Minute, 35 Second

ltte.kopi-002இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்பின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதாக கூறப்படும் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணி பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை சற்றுமுன் இலங்கை ராணுவம் உறுதி செய்துள்ளது.

அந்த மறைவிடத்தில் புலிகளின் தலைவருடன் இருந்த வேறு இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இருவரும், அப்பன், தேவியன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வந்த செய்தியின்படி, கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் மாஸ்டர் (வயது-31), இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம் முடிந்தபோது, ராணுவத்திடம் சரணடைந்து, தடுப்பு முகாமில் இருந்தார்.

அங்கிருந்து தப்பிச் சென்று, கத்தார் நாட்டில் சிறிதுகாலம் பணிபுரிந்தார். கத்தாரில் இருந்து ஐரோப்பா சென்று, விடுதலைப்புலிகள் வெளிநாட்டு பிரிவு(களில் ஒன்றான) நெடியவன் படையணியின் தலைவர் நெடியவனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

premium-idஅதையடுத்து நெடியவன், இவரை விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக்கி, இலங்கைக்கு அனுப்பி வைத்தார். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்கவே இவர் அனுப்பப்பட்டார் என கூறப்பட்டது.

இதையடுத்து இவரை தேடும் முயற்சியில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது. ராணுவ உளவுத்துறைக்கு நேற்று கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை, நெடுங்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றை ராணுவம் சுற்றிவளைத்தது.

அப்போது கோபியும் அவருடன் இருந்த இருவரும் துப்பாக்கியால் சுட்டபடி தப்பிச் சென்றனர்.

இதையடுத்து நெடுங்கேணி பகுதி முழுவதும் யாரும் வெளியேறாத வகையில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் இன்று அதிகாலை கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நெடுங்கேணியில் உள்ள வெடிவைத்தகல்லு என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருப்பதாக தெரியவந்தது.

அதையடுத்து இன்று அதிகாலை அந்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது. அப்போது இருதரப்பினரிடையேயும் நடந்த துப்பாக்கிச் சூட்டில், கோபியும், மற்ற இருவரும் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் ராணுவத்தை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது… பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு
Next post பொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது