சுவிட்சர்லாந்து ரயிலில் 19.5 இன்ச் பாம்பு, 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…

Read Time:1 Minute, 57 Second

snack-001சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் பாம்பு ஒன்றை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கொடுத்ததால் உடனடியாக அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த 450 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

சுவிட்சர்லாந்து நாட்டில் Bern முதல் Basel நகரங்களுக்கிடையே ஓடும் ரயில் ஒன்றில் பயணம் செய்வதற்காக பயணி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.

அப்போது கடுமையான விஷம் கொண்ட பாம்பு ஒன்று தனது காலருகே ஊர்ந்து செல்வதை பார்த்தார்.

a90462b1f9cb7f0160342044cec3ae1b
உடனடியாக அவர் ரயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தார். ரயில் கிளம்புவதற்கு சில நிமிடங்கள் முன் அவர் தகவல் கொடுத்ததால், ரயிலில் இருந்த 450 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பயணிகள் அனைவரையும் மாற்று ரயிலில் அனுப்பி வைத்தபின்னர், ரயிலில் பாம்பை தேடி கண்டுபிடித்த போலீஸார், இந்த பாம்பு கொடிய விஷம் கொண்ட அரியவகை பாம்பு என்றும், இது எவ்வாறு ரயிலில் வந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினர்.

இந்த பாம்பை யாராவது கொண்டு சென்றிருக்கலாம் என்றும், அதுசமயம் பாம்பு தப்பித்து ரயிலில் புகுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பாம்பு 19.5 இன்ச் நீளம் இருந்தது.

கடந்த 2006ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து ரயில் ஒன்றில் 3அடி நீள பாம்பு பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post EPDPகமல் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே, அனுமதியென நீதிமன்றம் உத்தரவு
Next post புலிகள் சார்பு அமைப்புக்களை தடை செய்தமை, பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல..