(PHOTOS) பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாஷத்திடம், 1.5 கோடி டொலர் நஷ்ட ஈடு கோரிக்கை..!
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து உலகப் புகழ்பெற்ற பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷத்திடம் (MIA), 15 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழக்குத் தொடுத்திருந்த அமெரிக்க சுப்பர்போல் கால்பந்தாட்ட விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், தற்போது அவரிடம் மேலும் 1.51 கோடி டொலர்களை (சுமார் 197 கோடி ரூபா) நஷ்ட ஈடாக கோரியுள்ளனர்.
2012 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தேசிய கால்பந்தாட் லீக் இறுதிப்போட்டியின் இடைவேளையில் இசை நிகழ்ச்சியொன்றின்போது பாடி ஆடிக்கொண்டிருந்த பாடகி எம்.ஐ.ஏ. நடு விரலை உயர்த்திக் காண்பித்தமையே இதற்குக் காரணமாகும். அவமதிப்பான சைகையாக இது கருதப்படும் நிலையில் பாடகி எம்.ஐ.ஏ.வின் இச்செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் அவர் இப்படி செய்தமையால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இதற்காக அமெரிக்கா தேசிய கால்பந்தாட்ட லீக்கும் (என்.எவ்.எல்) என்.பி.சி. தோலைக்காட்சி அலைவரிசையும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரின.
இந்நிலையில் 18 மாதங்களின் எம்.ஐ.ஏ.விடம் 15 இலட்சம் டொலர்களை நஷ்ட ஈடாக சுப்பர்போல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கோரினர். இந்த இந்த அபராதத்துக்கு எதிராக எம்.ஐ.ஏ. சட்டரீதியாக போராடி வருகிறார்.
தற்போது எம்.ஐ.ஏ.வின் நடவடிக்கையினால் தமது விளம்பர வருமானம் குறைவடைந்ததாக கூறி, மேலும் 1.51 கோடி டொலர்களை எம்.ஐ.ஏ.விடம் சுப்பர்போல் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். அதாவது மொத்தமாக 1.66 கோடி டொலர்களை (216.8கோடி ரூபா) அவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பொறியியலாளரும் ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவருமான அருள்பிரகாஷத்தின் (அருளர்) மகளாக 1975 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தவர் மாதாங்கி மாயா.
ஆவர் 6 மாத குழந்தையாக இருந்தபோது அவரின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்துக்கு திரும்பினர். 1986 இல் மாயா தனது தாயார் மற்றும் சகோதரருடன் மீண்டும் லண்டனுக்குச் சென்றார்.
இசைத்துறையில் ஆர்வம் காட்டிய அவர், 2000 ஆம் ஆண்டு எம்.ஐ.ஏ. என்ற பெயரில் இசைத்துறை வாழ்க்கைய அவர் ஆரம்பித்தார். பாடகி, பாடலாசிரியர், புகைப்படக்கலைஞர், மொடல், என பலதுறைகளில் ஈடுபடுவர் இவர்.
எஎம்,ஐ.ஏ. ஏன்பது அவரின் பெயரிலுள்ள எழுத்துக்களாகும். அதேவேளை மிஸ்ஸிங் இன் அக் ஷன் என்பதன் சுருக்கமே எம்.ஐ.ஏ. இதுவெனவும் கூறப்படுகிறது.
2005 இல் வெளியான முதலாவது பாடல் அல்பத்துக்கு தந்தையின் பெயரான அருளர் என பெயரிட்ட எம்.ஐ.ஏ. 2007 இல் வெளியிட்ட அல்பத்துக்கு ‘கலா’ என தனது தாயின் பெயரை சூட்டினார். ஆவரின் ‘பேப்பர் பிளேன்’ என்ற பாடல் அவருக்கு உலகளாகவிய புகழை பெற்றுக்கொடுத்தது.
பாடகர் பெஞ்சமின் புரொவ்மனை காதலித்த பாடகி எம்.ஐ.ஏ. 2009 ஆம் ஆண்டு ஆண் குழந்தையொன்றுக்கு தயானார். 2012 ஆம் ஆண்டு இத்தம்பதியினர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating