தனது மகள்களை மீட்டுத்தருமாறு: சவுதி மன்னரின் முன்னாள் மனைவி, ஒபாமாவிடம் கோரிக்கை

Read Time:2 Minute, 0 Second

savudiabdillaexwife2832014சவுதி அரேபிய அரசர் அப்துல்லாவின் முன்னாள் மனைவி அலனடு அல்பயாஸ் (வயது57). ஜோர்டானை சேர்ந்த இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். மன்னர் அப்துல்லா இவரை கடந்த 2003 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

சவுதி அரேபியா அரண்மனையில் தனது 4 மகள்கள் கைது செய்யப்பட்டு காவல் இருப்பதாகவும் அவர்களை மீட்டுத்தருமாறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் விண்ணப்பித்து உள்ளார்

செய்தி நிறுவனத்துக்கு அல்பயாஸ் அளித்த பேட்டியில் தனது மகள்கள் சாஹர்,மஹா,ஹலா,மற்றும் ஜவஹர் ஆகியோர் கடந்த 13 வருடமாக சிறைவக்கப்பட்டு உள்ளனர்.தனது மகள்களுக்கு எதிரான உரிமை மீறல்களுக்கு அதிபர் ஒபாமா தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

சவுதி அரேபியாவுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

சேனல்-4 வெளியிட்டுள்ள அல்பயாஸ் பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ஜெட்டாவில் உள்ள அரண்மனையில் கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். கடந்த 13 வருடங்களாக ஜித்தாவில் உள்ள அரண்மனையில் காவல்வைக்கபட்டு உள்ளனர்.

அவர்கள் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் இன்றி வெளியே செல்ல முடியாது. வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது அவர்களது உயிர் ஊசலாடுகிறது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை என கூறி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலி நம்பர் பிளேட் காரில் சென்ற, இலியானாவை துரத்தி பிடித்த போலீஸ்..
Next post மனைவியை விபசாரத்தில் ஈடுபட வலியுறுத்திய கணவன்..