இராணுவத் தளபதி பதவியை, இராஜினாமா செய்தார் அப்துல் பத்தாஹ்

Read Time:1 Minute, 48 Second

eygiptஎகிப்தின் இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தான் இராணுவ சீருடையுடன் தோன்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவென அப்துல் பத்தாஹ் அல் சிசி தெரிவித்துள்ளார்.

அல் சிசி தனது ராஜினாமாவை அறிவித்தன் பின் தனக்கு இந்த ஆண்டு இடம்பெறவுள்ள எகிப்தின் தேசிய தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இருப்பதாக தெரவித்துள்ளார்.

எகிப்தில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸியை பதவி கவிழப்பதில் முக்கிய பாத்திரம் வகித்தவர் அப்துல் பத்தாஹ் அல் சிசி என்பது குறிப்பிடத்தக்கது.

அப்துல் பத்தாஹ் அல் சிசிக்கு மக்கள் செல்வாக்கு காணப்படுவதால் எகிப்தின் ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலகுவாக வெற்றி பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இருப்பினும் பரவலாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தமையால் அல் சிசி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் எகிப்தில் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கும் என மனித உரிமை அமைப்புக்களும், எதிர்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமலாபால் -ஆர்யா பற்றி கிசு கிசு பரப்பிய பார்த்திபன்..
Next post வவுனியாவிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவதில், இராணுவத்தினர் தீவிரம்..