விசாரணை அவசியம் என்பதை இலங்கை நிராகரிப்பு

Read Time:1 Minute, 30 Second

003இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் தேவை அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் உத்தேச பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த உத்தேச பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களை அடுத்து மூன்றாவது முறையாகவும் திருத்தத்திற்கு உட்படுத்தி புதன்கிழமை மனித உரிமை பேரவையில் சமர்பித்து உரையாற்றும் போதே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, நவநீதம்பிள்ளையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரைபினை இலங்கைக்கான ஜெனீவா மனித உரிமை பேரவையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க நிராகரிப்பதாக சபையில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்
Next post விடுமுறையின் பின், பெண்ணாக திரும்பிவந்த ஆசிரியர்