வாழ்வா சாவா போராட்டம்: 2-வது சுற்றுக்கு தகுதி பெறுமா இத்தாலி- செக் குடியரசுடன் நாளை மோதல
உலக கோப்பை கால்பந்து போட்டியின் `லீக்’ ஆட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. `டி’ பிரிவில் இன்று நடை பெறும் ஆட்டங்களில் ஈரான்-அங்கோலா, போர்ச்சுகல்- மெக்சிகோ அணிகள் மோதுகின்றன. `சி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா -ஆலந்துடனும், ஐவரி கோஸ்ட்-செர்பியாவுடனும், பலப்பரீட்சை நடத்துகின்றன. உலக கோப்பை போட்டியின் 14-வது நாளான நாளை `இ’ பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றது. இதன் ஒரு ஆட்டத்தில் இத்தாலி-செக் குடியரசு அணிகள் மோதுகின்றன.இரு அணிகளுக்குமே நாளைய ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தாலி போட்டியை `டிரா’ செய்தாலே 2-வது சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால் செக்குடியரசு வெற்றிபெற் றால் மட்டுமே 2-வது சுற்றில் நுழைய வாய்ப்பு உள்ளது.
1934, 38 மற்றும் 1982-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி தனது முதல் ஆட்டத்தில் கானாவை தோற்கடித்திருந்தது. 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்து 4 புள்ளிகளுடன் உள்ளது. நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா என்ற சூழ்நிலையில் உள்ளது.
புதிதாக களம் இறங்கிய செக் குடியரசின் ஆட்டம் சிறப் பாகவே உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது. 2-வது ஆட் டத்தில் கானாவிடம் 0-2 என அதிர்ச்சி தோல்வி அடைந்தது. செக் குடியரசு அணியில் முன் களமும், நடுகளமும் சிறப்பாக உள்ளது. இத்தாலி அணிக்கு எல்லா வகையிலும் அந்த அணி ஈடுகொடுத்து ஆடும். கேப்டன் கொல்லர் அணிக்கு பலமாக உள்ளார்.
ஒருவேளை இத்தாலி தோற்கும் பட்சத்தில் அந்த அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கானா-அமெரிக்கா இடையேயான வெற்றி, தோல்வியை பொறுத்தே அமையும். கானா-அமெரிக்கா போட்டியில் கானா வெற்றி பெறுகிற போது இத்தாலி போட்டியில் இருந்து வெளி யேற்றப்படும்.
கானா 6 புள்ளிகளுடன் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும். மாறாக அமெரிக்கா வெற்றி பெற்றால் கானா அணி வெளியேறும். அப்போது இத்தாலியும் அமெரிக்காவும் தலா 4 புள்ளிகள் பெறும். அதனால் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் அணி அமெ ரிக்காவா, இத்தாலியா என்பது கோல்கள் அடிப்படையில் முடிவு செய்யப்படும். கானா- அமெரிக்கா ஆட்டம் இரவு நடக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...