உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?
‘விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போஸ்டர் மற்றும் டீசர்களில் வெளியான கமலின் தோற்றம், பிரெஞ்சு புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக இணையதளங்களில் பரவத் தொடங்கின. உண்மையில், இந்த தோற்றம் கேரளாவில் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞனுக்குண்டானது. கேரளாவின் வடக்கே மலபாரில், ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றியபின் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடப்படும் ஒரு நடன வகைதான் தெய்யம்.
இந்த ஆட்டக்கலையை தெய்யாட்டம் எனவும், வேடத்தை தெய்யக்கோலம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆட்டத்தின் சிறப்பை தமிழுக்கு அறிமுகப்படுத்தவே உலக நாயகன் இந்த படத்தில் தெய்யக்கோலத்தில் தோன்றுகிறாராம். அதைவிடுத்து, அவர்மீது திருட்டு பட்டம் கூறுவது சரியல்ல.
மேலும், படத்திற்கு படம் சினிமாவில் ஏதாவது புதுமுயற்சியை கையாள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் கமலின் இந்த புதுமுயற்சியை களங்கடிக்க நினைப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating