7 வயது சிறுமி துஷ்பிரயோகம்: யாழ் இளைஞன் கைது

Read Time:2 Minute, 17 Second

rape.childயாழ்ப்பாணம் அளவெட்டி பத்துப்பனையடியினைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமியினை அதேயிடத்தினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவன் நேற்று நண்பகல் பாலியல் பலாக்காரம் செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்து, குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சிறுமி வேறுசில சிறுமிகளுடன் தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஆலயமொன்றில் நீர் அருந்தச் சென்றுள்ளார்.

ஒவ்வொரு சிறுமியும் நீர் அருந்திவிட்டுச் செல்கையில் இறுதியாக இந்தச் சிறுமி நீர் அருந்திக் கொண்டிருந்த நேரம் அவ்விடத்திற்கு வந்த மேற்படி இளைஞன் சிறுமியின் வாயினைப் பொத்தி வீடொன்றிற்குள் தூக்கிச் சென்று இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி அழுதுகொண்டு வந்தவேலை வீதியில் சென்றவர்கள் விசாரித்து நடந்து விடயத்தினை அறிந்து சிறுமியின் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பெற்றோர்கள் உடனடியாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுமியினை வைத்திய பரிசோதனைகளுக்கான தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விகாரைக்குள் புதையல் தோண்டிய பிக்கு உட்பட நால்வர் கைது
Next post கடலில் மூழ்கி அக்காவும், தம்பியும் மாயம்