ஆபாசப்பட ரீ ஷேர்ட்கள் கடையில் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக, அனைத்தையும் கொள்வனவு செய்த தாய்

Read Time:2 Minute, 54 Second

4382woman1அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் காட்சியறை ஒன்றில் காணப்பட்ட கவர்ச்சிப் படங்கள் கொண்ட ரீ ஷேர்ட்கள் சங்கடத்தை ஏற்படுத்துபவையாக இருந்ததால் அவை தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக அவை அனைத்தையும் கொள்வனவு செய்து சங்கடத்தினை தவிர்த்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

உட்டா மாநிலத்தைச் சேர்ந்த ஜுடி கொக்ஸ் என்ற பெண் தனது 18 வயது மகனுடன் ஒரெம் நகரிலுள்ள கடைத்தொகுதிக்குச் சென்றார். இதன்போது பெக்ஸன்னின் காட்சியறை ஒன்றை கடந்து செல்ல நேரிட்டுள்ளது.

அங்கு படு கவர்ச்சியான படங்கள் பொறிக்கப்பட்ட ரீ ஷேர்ட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவை ஆபாசமாகவும் முறையற்றதாகவும் இருந்ததாகக் கூறி அவற்றை அங்கிருந்து நீக்க முயற்சித்துள்ளார் கொக்ஸ். காட்சியறையின் முகாமையாளரிடம் இது தொடர்பாக முறைப்பட்டுள்ளார்.

ஆனால் ரீ ஷேர்ட்களை காட்சியறையிலிருந்து எடுக்க முடியாமல் போயுள்ளது. இதனையடுத்தே காட்சிப்படுத்தப்பட்ட ரீ ஷேர்ட் உட்பட அவ்வகை ரீஷேர்ட்கள் 19 இனையும் 569 டொலர்களுக்கு தானே கொள்வனவு செய்துள்ளார்.

இது குறித்து கொக்ஸ் கூறுகையில், ‘அங்கிருந்த ரீ ஷேர்ட்களில் ஒன்றில் பெண் ஒருவரின் கீழ் பாகம் முற்றாக மறைகப்படாமல் இருந்தது.

அவற்றினை சிறுவர்களும் காணக்கூடியதாக உள்ளது. 3, 4 நாட்களில் எவரோ முடிவு செய்து அகற்ற முடிவு செய்யும் வரையில் அவற்றினை அங்கு காட்சிப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

தான் கொள்வனது செய்த ஆபாசப்பட ரீ ஷேர்ட்களை பெக்ஸன் நிறுவனத்தின் 60 நாட்கள் மீளளிக்கும் கால அவகாசம் முடிவடையும் தருணதத்தில்; மீளளிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் கொக்ஸ். அத்துடன் தொடர்ந்து தனது எதிர்பினை கடிதம் மூலம் பெக்ஸன்னுக்கு கடடிதம் மூலம் தெரிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரம்யாவை கடத்தி கட்டாய திருமணம் திடீர் போஸ்டரால் பரபரப்பு
Next post வீடியோ விளையாட்டு விளையாடுவதை தடுத்த, தந்தையை படுகொலை செய்த மகன்