மயங்கிய 8 வயது மகனை உயிருடன் புதைத்த தம்பதி

Read Time:1 Minute, 50 Second

dead-005மயக்க நிலையில் இருந்த 8 வயது மகனை இறந்து விட்டதாக நினைத்து குழி தோண்டிப் புதைத்த சம்பவமொன்று அண்மையில் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோமாக சவூதியில் தங்கியிருக்கும் பெண்ணொருவரும் சவூதியைச் சேர்ந்த அவரது புதிய கணவரும் இணைந்தே அப்பெண்ணின் 8 வயது மகனை புதைத்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் பின்தங்கிய பகுதி ஒன்றுக்கு தனது மகனுடன் இத்தம்பதி உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனத.

புதைக்கப்பட்ட சிறுவன் உடல் சோர்வினால் மயக்கமடைந்துள்ளான். ஆனால் இத்தம்பதியோ மகன் இறந்து விட்டதாக நினைத்து பயணம் மேற்கொண்டிருந்த இடத்திலேயே இரவுவேளையில் குழி தோண்டிப் புதைத்துள்ளனர்.

இதனை அவதானித்த நபரொருவர் குறித்த தம்பதி வெளியேறும் வரையில் காத்திருந்து சந்தேகத்தில் சிறுவனைத் தோண்டி எடுத்துள்ளார். சிறுவனும் உயிருடன் இருந்துள்ளான்.

பின்னர் உயிருடன் இருந்த சிறுவனைப் புதைத்த தம்பதியியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் அச்சிறுவனை சமூக நிலையமொன்றிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரேபிய பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14வயது சிறுமி கடத்தல்: இளைஞன் தாய் பொலிசாரால் கைது
Next post ஆசிரியையை கொன்ற ‘சாரி’