11 மாத பச்சிளம் பாலகியை கடித்து குதறிக் கொன்ற நாய்

Read Time:1 Minute, 57 Second

002இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

லங்காஷயர், பிளக்பேர்ன் நகரைச் சேர்ந்த அவா ஜேன் கொர்லஸ் என்ற பாலகியே இவ்வாறு நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஜேனின் தாயான சொலிகிங்கும் (20 வயது), தாயின் காதலரான லீ நைட்டும் (26 வயது) நாயுடன் போராடி பாலகியை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் மருத்துவர்களால் பாலகியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது.

பாலகியை கடித்துகொன்ற மூர்க்கங் கொண்ட நாயை மேற்படி தம்பதி வளர்ப்பது குறித்து அயலவர்கள் ஏற்கெனவே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

பிரித்தானிய 1991ஆம் ஆண்டு அபாயகரமான நாய்கள் சட்டத்தின் கீழ் இந்த வகை நாய்களை வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட நாயை வளர்த்து பாலகியின் மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் பாலகியின் தாயும் காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தையை விற்ற தந்தை: 5 ஆண்டு ஜெயில்
Next post அளவுக்கதிகமாக உணவு நீரை உட்கொண்டதால் பெண்ணின் வயிறு வெடிப்பு