பெற்றோரின் காரை இரகசியமாக செலுத்திச் சென்ற 10 வயது சிறுவன்

Read Time:2 Minute, 57 Second

4250Thum10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய சம்பவம் நோர்வேயில் இடம்பெறுள்ளது.

ஒஸ்லோவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக்கா நகரில் வகிக்கும் இச்சிறுவன் அண்மையில் ஒரு நாள் காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து காரை செலுத்திக்கொண்டு 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தனது தாத்தா பாட்டியின் வீட்டைநோக்கி புறப்பட்டான். காருக்குள் தனது 18 மாத வயதுடையு தங்கையையும் வைத்துக்கொண்டான். அவ்வேளையில் அச்சிறுவனின் பெற்றோர்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனராம்.

இச்சிறுவன் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில் வீதியில் பனிப்படிவுகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் இச்சிறுவன் காரைசெலுத்துவதை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதையடுத்து பொலிஸார் அக்காரை மறித்து சோதனையிட்டபோது, தனது வயதை மறைத்த அச்சிறுவன், தான் வளர்ச்சி குறைந்த குள்ள மனிதன் எனவும் தனது சாரதி அனுமத்திப்பத்திரத்தை எடுத்துவர மறந்துவிட்டதாகவும் கூறினான்.

ஆனால் அவன் கூறுவது பொய் என்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இதேவேளை வீட்டில் உறங்கியெழுத்த பெற்றோர் தமது பிள்ளைகளையும் காரையும் காணாமல் தவித்தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘நாம் அப்பெற்றோருடன் பேசினோம். அவர்கள் இனிமேல்தமது பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம். அதிஷ்வசமாக அச்சிறார்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. காருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்விடயத்தில் குற்றச்சாட்டு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை’ என மேற்படி பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவேளை உணவுக்காக 2500 ரூபாய் செலவிடும் அமைச்சரின் மகன்
Next post மிஷெல் ஒபாமாதான் ‘இன்னும் மிகச்சிறந்த வலன்டைன்’: புகைப்படம் வெளியிட்டார் பராக் ஒபாமா