மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்

Read Time:1 Minute, 33 Second

c.dமாவ­னல்லை நகரில் பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு ஆபாச படங்கள் அடங்­கிய வீடியோ சீ.டி.க்களை விற்­பனை செய்த நபர் ஒரு­வ­ருக்கு மாவ­னெல்லை நீதி­மன்ற நீதிவான் 300 ரூபா அப­ரா­தமும் 6 மாத சிறைத்­தண்­ட­னையும் விதித்­துள்ளார்.

மாவ­னெல்லை நகரில் அமைந்­துள்ள வீடியோ நாடாக்கள் விற்­பனை செய்யும் வீடியோ நிலைய உரி­மை­யா­ள­ருக்கே இவ்­வாறு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

மாவ­னல்லை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தகவல் ஒன்­றி­னை­ய­டுத்து குறிப்­பிட்ட நிலை­யத்தில் திடீர் சோத­னை­களை மேற்­கொண்டு சில ஆபாசப் பட சீ.டி.க்களை கண்டு பிடித்து கைப்­பற்­றி­ய­துடன் உரி­மை­யா­ள­ரையும் கைது செய்து நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­தனர்.

இதன்­போது உரி­மை­யாளர் பொலி­ஸாரின் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு தான் குற்­ற­வா­ளி­யென ஒப்புக் கொண்­ட­தை­ய­டுத்து நீதிவான் அவ­ருக்கு 300 ரூபா அபராதமும் 6 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத தண்டனையையும் விதித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவன் நீரோடையில் வீழ்ந்து மரணம்!
Next post ஒருவேளை உணவுக்காக 2500 ரூபாய் செலவிடும் அமைச்சரின் மகன்