காதலியை ஈபேயில் ஏலம் விட்ட காதலன் : கொள்வனவு செய்ய 56 பேர் விருப்பம்

Read Time:2 Minute, 13 Second

42281ஈபே இணையத்தளத்தில் அவ்வப்போது வேடிக்கையான விற்பனைகளும் நடைபெறும். அந்த வகையில் அண்மையில் பிரித்தானியாவின் சேர்ந்த காதலன் ஒருவர் தனது காதலியை விற்பனை செய்வதற்காக ஈபேயில் ஏலம் விட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

பிரித்தானியாவின் நோர்தம்ப்டொன்ஷயரிலுள்ள கெட்டரிங்கில் வசிக்கும் ஷோன் கோல்ஸ் என்பவரே தனது காதலியான டெபி மோரன் என்பவரை ஈபேயில் ஏலம் விட்;டுள்ளார்.

தனது காதலி வீட்டுவேலைகளில் ஈபடுவதில் சோம்பலானவர். 6 வயதுடைய வயதான பெண்மணி என விளக்கி காதலியை இணையத்தளத்தில் புகைப்படமொன்றினையும் தரவேற்றியுள்ளார்.

இப்புகைப்படத்தில் மோரனைச் சுற்று பொருட்கள் பரவி இருக்க சோம்பலாக ஓரிடத்தில் அமர்ந்தள்ளார்.

ஆச்சரியமாக மோரனை வாங்குவதற்கு 56 பேர் ஏலத்தில் பங்குகொண்டுள்ளனர். அதிகபட்சமாக 721 யூரோவுக்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார். இந்நிலையில் ஈபே சட்டத்திற்கு புறம்பாக அமைந்த இந்த ஏலம் ஈபே இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. கோல்ஸ் செய்தது தனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அவர் இதனை விளையாட்டாகவே செய்துள்ளாh என தான் நம்புவதாக கூறியுள்ளார் மோரன்.

இதேவேளை தான் தனது காதலியை நேசிப்பதாகவும் எதற்காகவும் எனது காலியை விற்கமாட்டேன் என கோல்ஸ் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மோரன் ‘தன்னை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிகிறார் கோல்ஸ்’ என சமாதானமான நிலையில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆஸ்திரேலியாவில் மகனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற தந்தை
Next post ஈரானிய மகளிர் கால்பந்தாட்ட அணியில், ஆண்களாக இனங்காணப்பட்ட நால்வருக்குத் தடை;