விமானப் பயணிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்காக, நீச்சலுடை மங்கைகளின் கவர்ச்சி வீடியோ

Read Time:2 Minute, 39 Second

4231_newsthumb_thumநியூஸிலாந்தின் விமான சேவை நிறுவனமொன்று விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வீடியோவை மிக செக்ஸியாக தயாரித்து வெளியிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு பயணிகளை தயார்படுத்துதற்காக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்குவது விமான ஊழியர்களின் வழக்கம். சில விமானங்களில் வீடியோ மூலம் பாதுகாப்புச் செயன்முறைகள் விளக்கப்படுவதுண்டு.

ஆனால், எயார் நியூஸிலண்ட் எனும் விமான சேவை நிறுவனம் தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்குவதற்கான வீடியோவில் நீச்சலுடை அணிந்த பெண்களை தோன்றச்செய்துள்ளது.

கிறிஸ்டி பிரிங்லே, கிறிஸி டெய்கன், ஜெஸிகா கோமஸ் உட்பட சர்வதேச புகழ்பெற்ற நீச்சலுடை மொடல்கள் பலர் இதில் தோன்றியுள்ளனர்.

உலகின் மிக அழகான பாதுகாப்பு வீடியோ என எயார் நியூஸிலண்ட் நிறுவனம் இந்த வீடியோவை வர்ணித்துள்ளது. அதற்கு ‘சொர்க்கத்தில் பாதுகாப்பு’ எனும் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை இந்நிறுவனத்தின் விமானங்களில் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோவை சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாதுகாப்பு குறித்த வீடியோவொன்றில் அதிக பாலியல்மயமான படங்களை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாக  நியூஸிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான டெபோரா ரஸல் விமர்சித்துள்ளார்.

ஆனால், இந்த வீடியோ பயணிகள் மத்தியில் பாதுகாப்பு விழிப்புர்வுத் தகவல்களை கொண்டுசெல்ல உதவும் என எயார் நியூஸிலண்ட் நிறுவனம் கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமாகி 50 வருடம் சேர்ந்து வாழும் ஜோடிகளைக் கௌரவித்து விருது வழங்கும் போலந்து
Next post கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு பஸ் தீப்பற்றியது; 41 பயணிகள் தப்பினர்