தென் கொரியாவில் இன்று ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம்..

Read Time:3 Minute, 4 Second

169f70வடகொரியாவில் பிறந்த சன் மியுங் மூன் என்பவர் சிறந்த தொழிலதிபராகவும், மதத் தலைவராகவும் இருந்ததோடு ஊடகங்களின் முன்னணியிலும் இடம் பெற்றார். தன்னைத்தானே ஒரு வழிகாட்டுதலுக்குரிய தலைவராக அறிவித்துக் கொண்ட அவர் தென்கொரியாவில் ஒற்றுமைக்கான ஒரு தேவாலயத்தை நிறுவினார்.

இங்கு 1960ஆம் ஆண்டிலிருந்து அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. முதலில் சில டஜன் ஜோடிகளில் தொடங்கிய இந்தத் திருமணங்கள் நாளடைவில் அதிகரிக்கத் தொடங்கி விட்டன.

கடந்த 1997ஆம் ஆண்டில் வாஷிங்டனில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 30,000 ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சியோலின் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 21,000 ஜோடிகள் தங்கள் வாழ்வில் இணைந்தனர்.

இந்தத் திருமணங்கள் அனைத்தும் அப்போது மூனாலேயே முடிவு செய்யப்பட்டன.

சர்வதேச கலாச்சார மாறுதல் கொண்ட திருமணங்களை அவர் எப்போதும் தேர்வு செய்ததால் மணமக்களிடையே பொதுவான மொழி எதுவும் தேவைப்படவில்லை.

தனது 92ஆவது வயதில் கடந்த 2012ஆம் ஆண்டு மூன் இறந்த பின்னர் அவரது மனைவி ஹக் ஜா ஹன்(71) இன்று சியோலில் நடந்த இரண்டாவது வெகுஜன திருமணத்திற்குத் தலைமை தாங்கினார்.

தலைநகர் சியோலுக்குக் கிழக்கே இந்தத் தேவாலயத்தின் உலகத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பியோங்கில் இந்தத் திருமண வைபவம் நடைபெற்றது.

ஒரே மாதிரி உடையணிந்திருந்த 2,500 ஜோடிகள் இன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களில் பலர் சில நாட்களுக்கு முன்னர் தான் சந்தித்திருந்தனர். பலர் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

தகுந்த ஜோடியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தற்போது பெற்றோர்கள் வசம் விடப்பட்டுள்ளது. எனினும், இன்று திருமணம் செய்து கொண்ட இந்த தேவாலயத்தின் உறுப்பினர்கள் பலரும் சில நாட்கள் முன்னர் மூனின் மனைவி தலைமையில் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தான் தங்களின் துணைகளைத் தேர்ந்தெடுத்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனக்குத்தானே தீ வைத்த நபரை கட்டிப் பிடித்த பெண், இருவரும் பலத்த எரிகாங்களுடன் வைத்தியசாலையில்!
Next post காதலர்களுக்கு பாதுகாப்பளியுங்கள்! பொலிஸ் நிலையத்தில் மனு