குழந்தைகளுக்கு மது ஊற்றி கொடுத்து விட்டு, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்!!

Read Time:2 Minute, 48 Second

sexzindagi-5aதிருச்சி அரசு வைத்தியசாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி வந்தார். அந்த குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தன.

உடனடியாக அந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டபோது அந்த பெண் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்தது.

2 குழந்தைகளும் மது போதையில் இருந்து மீள முடியாமல் தவித்தது சிகிச்சையின்போது அனைவரையும் கலங்கடித்தது. இதற்கு காரணம் குழந்தைகளின் தாய் பாத்திமா, அவரது கணவர் ஜலால் என்பவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் 2 குழந்தைகளுடன் திருச்சி நத்தர்ஷா பள்ளி வாசல் பகுதிகளில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

அவர்களுக்கு தங்க வீடு எதுவும் இல்லாததால் தெரு மற்றும் பிளாட்பாரங்களில் தங்கியிருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு பாத்திமாவை தேடி வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது குழந்தைகள் இருவரும் தூங்காமல் விளையாடி கொண்டிருந்தனர்.

இதனால் அந்த வாலிபர் கொண்டு வந்த மதுவை வாங்கிய பாத்திமா, தனது குழந்தைகள் யாசிக் அன்சாரி (வயது 5), பரக்கத் நிஷா (2½) ஆகியோருக்கு கொடுத்துள்ளார். அதனை குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விட்டன.

அந்த நேரத்தில் வாலிபர் பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். காலையில் வழக்கம்போல் குழந்தைகள் விழிக்கவில்லை என்பதால் பதட்டம் அடைந்த பாத்திமா, அரசு வைத்தியசாலைக்கு அவர்களை தூக்கிக்கொண்டு வந்துள்ளார்.

இந்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து பாத்திமாவிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர். பாத்திமாவுடன் உல்லாசம் அனுபவித்த அந்த வாலிபர் அவரது தாயாரின் கள்ளக்காதலனாவும் இருந்து வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதே போல் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்” – வனிதா தயாரிக்கும் புதுப்படப் பூஜை!
Next post 22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி!