வாலுடன் பிறந்த அனுமானின் அவதாரம் : இந்திய பக்தர்கள் பெருமிதம் (video)

Read Time:2 Minute, 0 Second

139185இந்தியாவில் ஒருவருக்கு 14 இன்ச் வால் இருப்பதால் அவர் தன்னை ஹனுமானின் அவதாரம் என்று சொல்லி வருகிறார். அவரிடம் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆசிவாங்கி செல்கின்றனர்.

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த Chandre Oraon என்பவருக்கு பிறவியிலேயே சிறிய வால் இருந்தது. அவர் வளர வளர வாலும் வளர்ந்தது.

நாளடைவில் அவருக்கு ஹனுமானின் சக்தி இருப்பதாகவும், அவர் ஹனுமானின் மறுஅவதாரம் என்று கூறப்பட்டது.

இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் அவரிடம் ஆசி வாங்க பக்கத்து ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து ஆசி வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து Chandre Oraon கூறும்போது, சிறுவயதில் வால் இருப்பதால் சக சிறுவர்களின் கேலிக்கு ஆளான நான் பின்னர் இந்த வால்மூலம் எனக்கு சக்தி இருப்பதை அறிந்தேன். நான் ஹனுமானின் பிறந்தநாள் அன்று பிறந்ததால் என்னை எல்லோரும் ஹனுமானின் அவதாரம் என்றே அழைக்கின்றனர்.

Monika Lakda என்ற பக்தை கூறும்போது, எனது சகோதரி மகனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாதபோது பல மருத்துவ சிகிச்சைகள் செய்தும் குணமாகவில்லை.

ஆனால் ஹனுமானின் அவதாரமாகிய இவரிடம் அழைத்து வந்தோம். அவர் சகோதரி மகளை ஆசி செய்து விபூதி கொடுத்தார். அன்றிலிருந்து அவனுக்கு உடல்நிலை தேறி தற்போது நலமாக இருக்கிறான். இவரை நாங்கள் ஹனுமானின் அவதாரமாகவே பார்க்கிறோம் என கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 22 வருடங்களுக்கு பிறகு பேஸ்புக்கால் நடந்த இன்ப அதிர்ச்சி!
Next post வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களை குறிவைத்து; பொலிஸார் எனக் கூறி நகை, பணம் கொள்ளை!