புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி

Read Time:2 Minute, 4 Second

accsident-01புத்தளம் மன்னார் வீதியில் சமகிகம எனும் பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் திசையிலிருந்து சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றும் வண்ணாத்திவில்லு திசையிலிருந்து புத்தளம் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தையடுத்து மோட்டார் சைக்கிள் பெற்றோல் தாங்கி வெடித்து தீப்பற்றிக் கொண்டதில் அந்த தீயில் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனமும் தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இதனால் புத்தளம் மன்னார் வீதியில் வாகனப் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைத்து வாகனப் போக்குவரத்தினை வழமைக்குக் கொண்டு வந்தனர்.

இவ்விபத்தில் நாகவில்லு மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த சாமிநாதன் நந்தகுமார் (29), வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்த ஈ. எம். அசங்க பண்டார (18) ஆகிய இளைஞருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவர்களது சடலங்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வண்ணாத்திவில்லு பொலிஸார் டிப்பர் வாகனத்தில் சாரதியைக் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) ஆபாச வீடியோவில் தோன்றியதால், பட்டத்தை இழந்த அழகுராணி
Next post அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை