ஏப்ரல் 11 இல் பிரமாண்டமாக வெளியாகிறது ‘கோச்சடையான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு
நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா… வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என வந்து நிற்கிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க இன்றைக்கு நாளைக்கு என பல திகதிகள் வெளியாகின. இருப்பினும் பாடல் கூட குறிப்பிட்ட திகதியில் வெளியாகவில்லை.
இந்நிலையில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான திரையரங்களில் தமிழ், இந்தி, தெலுங்கு, போஜ்புரி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஜப்பானிஸ், ப்ரெஞ்சு மற்றும் ஆங்கிலம் என 10 மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இந்திய நட்சத்திரம் ஒருவரின் படம் இத்தனை மொழிகளில் நேரடியாக வெளியாவது இதுவே முதல் முறை.
தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் ரஜினியே டப்பிங் பேசியுள்ளார். ஜப்பானிய மொழியில் அவர் முதலில் டப் செய்வதாக இருந்து, பின்னர் வேறு நபர் மூலம் டப் செய்யப்பட்டுள்ளது.
முப்பரிமாண திரைப்படமான கோச்சடையானில் ரஜினி இரு வேடங்களில் நடிக்க அவரது மகள் சௌந்தர்யா இப்படத்தினை இயக்கியுள்ளார்.
ஆங்கிலத்தில் சர்வதேச அளவில் தனியாக வெளியிட தயாரிப்பு நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதுடன் பல்லாயிரம் திரையரங்குகளில் திரையிடவும் எதிபார்த்துள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating