மூன்றாவது ஆட்டத்திலும் ஜெர்மனி வெற்றி!
ஈக்வடாரைத் தோற்கடித்து “ஏ’ பிரிவில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது போட்டியை நடத்தும் ஜெர்மனி. பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈக்வடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மனி. ஆட்டத்தின் 4-வது நிமிஷத்தில் மிராஸ்லாவ் குளோஸ் அடித்த கோலால் உற்சாகத்தில் மூழ்கியது ஒலிம்பிக் ஸ்டேடியம். அவரே முதல் பாதி நேர ஆட்டம் முடிய ஒரு நிமிஷம் இருக்கையில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் முன்னிலையை வலுப்படுத்தினார்.
57-வது நிமிஷத்தில் பொடோல்ஸ்கி அடித்த கோல், ஜெர்மனியை 3-0 என உயர்த்தியது. அதன்பிறகு இரு அணிகளும் கோல் போடவில்லை. மிராஸ்லாவ் குளோஸ் இந்த ஆட்டத்தில் 2 கோல்களை அடித்ததையடுத்து மொத்தம் 4 கோல்களை இதுவரையில் சேர்த்து, அதிக கோல்களை அடித்த வீரராகியுள்ளார்.
முதலிடத்துக்கு….இவ்விரு அணிகளும் ஏற்கெனவே 2-வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றுவிட்டன. ஆனால், பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதன் மூலம் அடுத்த சுற்று ஆட்டத்தில் எளிதான அணியுடன் விளையாடலாம் என்ற நிலையைப் பெற்றிருந்தன. அந்த வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இங்கிலாந்துடன் விளையாடுவதைத் தவிர்க்க முடியும். அதனால் இந்த ஆட்டம் மிகவும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால், ஈக்வடார் அணி ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.
ஜெர்மனி 9 புள்ளிகளையும், ஈக்வடார் 6 புள்ளிகளையும் சேர்த்து “ஏ’ பிரிவில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்தன.
போலந்து வெற்றி: ஹனோவரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு “ஏ’ பிரிவு ஆட்டத்தில் கோஸ்டா ரிகா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது போலந்து.
இவ்விரு அணிகளும் ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறியதால் இந்த ஆட்டம் சம்பிரதாயமாகவே அமைந்திருந்தது. அதில் போலந்து வெற்றி பெற்று, வென்ற திருப்தியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.
பார்தோஸ் போஸôக்கி போலந்துக்கு 2 கோல்களையும் அடித்தார். ஆனால் கோம்ஸ் அடித்த கோலால் ஆட்டத்தின் 25}வது நிமிஷத்தில் கோஸ்டாரிகா முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது.
போலந்துக்கு இது முதலாவது வெற்றி. அதே சமயம் கோஸ்டா ரிகா 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி வெளியேறியது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...