இலங்கை பெண்ணிடம் சில்மிஷம் செய்த, வைத்தியர் உட்பட அறுவர் கைது

Read Time:2 Minute, 25 Second

Arrest-தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெண்ணொருவரிடம் சில்மிஷம் செய்தமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42), சித்தா வைத்தியர். இவர் எம்.புதுப்பட்டியில் கிளீனிக் நடத்தி வருகிறார்.

அங்கு குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த புஷ்பலதா (24) என்பவர் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு வரவில்லை.

இதனை தொடர்ந்து புஷ்பலதாவின் கையடக்கத் தொலைபேசிக்கு வைத்தியர் செல்வராஜ் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவருக்கும், புஷ்பலதாவின் அண்ணன் செல்வகுமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செல்வராஜ், அவரது மனைவி கனகலட்சுமி, உறவினர்கள் சாத்தூர் படந்தாலை சேர்ந்த பாலமுருகன் (வயது35), மாரிமுத்து (30), கார்த்திக் (28), முத்து (24), காளிராஜ் (27) ஆகியோர் காரில் வந்து கொலைமிரட்டல் விடுத்ததாக செல்வகுமார் பொலிசில் புகார் செய்துள்ளார்.

மேலும் புஷ்பலதாவிடம், வைத்தியர் செல்வராஜ் சில்மிஷம் செய்ததால் தான் வேலைக்கு செல்லவில்லை என்றும், இதனை கண்டித்ததாலேயே கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சூளக்கரை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வைத்தியர் செல்வராஜ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கனகலட்சுமியை பொலிசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி
Next post தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!