தியாகிகள் தினப்பொதுக் கூட்டமும் நினைவுத்து}பி திறந்து வைக்கும் நிகழ்வும்

Read Time:3 Minute, 24 Second

EPRLF.martyrs_day_2006.jpgஇன்று காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு வாவிக் கரைவீதியிலுள்ள ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி- பத்மநபா அமைப்பின் அலுவலகத்திலிருந்து யுத்தம்வேண்டாம் சமாதானம் வேண்டும் என்ற கோசத்துடன் தியாகிகள் தின ஊர்வலம் புறப்பட்டது. புலிகளே! விடுதலையின் பேரில் தமிழ் சமூகத்தை குழி தோண்டிப் புதைக்காதே! மாற்றுக் கருத்துக் கொண்டோரைப் படுகொலை செய்வதை நிறுத்து! சமாதானம் பேசிக் கொண்டுகுழந்தைகள் தொடக்கம் தொழிலாளர்கள் வரை படுகொலை செய்யாதே! என ஊர்வலத்தில் கோசங்கள் எழுப்பப்ட்டன.

;இந்தப்பேரணி மட்டக்களப்பு இராணுவத்தளபதி, யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு, மட்டு திருமலை அதிமேற்றிராணியார் ஆகியோரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தது. குறிப்பாக புலிகளின் அதிகார அகங்கார அபிலாசைகளுக்காக நாளும் பொழுதும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது. அவர்களின் இடம்பெயர்வு, சொத்தழிவு, கல்வி ,சமூக பொருளாதார வாழ்வு காயடிக்கப்பட்டிருப்பதை பற்றி பிரஸ்தாபித்திருந்தது. மகஜரை ஈபிஆர்எல்எப் பத்மநாபா அமைப்பைச்சேர்ந்த தோழர் இரா பத்மநாதன்; கையளித்தார்.

சுமார் 500-700 பேருக்கும் மேற்பட்ட பெருந்திரளான பொதுமக்கள் இவ் ஊர்வலத்தில பங்கேற்றனர். .தியாகிகளின் படங்கள்- ஹெப்பற்றிக்கொலவ ,அல்லப்பிட்டி ,வங்காலை வெலிகந்த படுகொலைகளை சித்தரிக்கும் பதாகைகளை பேரணியில் கொண்டுசெல்லபட்டன.

ஜனநாயகத்திற்காகவும், தேசிய ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராடி மரணித்த அனைத்து மாற்று அமைப்புக்கள் கட்சிகள் பொதுமக்களின் ஞாபகார்த்தமாக 12 அடி உயர ஸ்து}பி மட்டு வைத்தியசாலைக்கருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.

தோழர் துரைரட்ணம் அவர்களின் தலைமையில நடைபெற்ற பொதுக்கூட்டதில் அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் தியாகிகளை நினைவு கூர்ந்தனர். ஈபிஆர்எல்எப்-பத்மநாபா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) , கருணாஅம்மானின் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் ஆகிய மாற்று அமைப்புக்கள் பலநு}ற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்குபற்றினர்.

படுகொலைகளுக்கு மத்தியில் மனித வாழ்வின் பெறுமதியை வலியுறுத்தும் நம்பிக்கை தரும் நிகழ்ச்சியாக இது இடம்பெற்றிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நோர்வே சேதுவின் குடும்பத்தில் பிளவு??
Next post யாழ் மாவட்ட தியாகிகள் தின அஞ்சலி நிகழ்வுகள்