நடுரோட்டில் குளியல் போட்டு, ஆசிரியை ஆதங்க போராட்டம்

Read Time:1 Minute, 45 Second

011சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாக கிடந்தால் இந்த அவலத்தை நிர்வாகத்துக்கு வலியுறுத்தும் விதமாக நாற்று நட்டு போராட்டம் நடத்துவதை கேள்விப்படுகிறோம்.

இதையே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான கோணத்தில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். இவர் சமீபத்தில் சமுதாய சேவை பணிக்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார்.

அப்போது அவர் பயணம் செய்த கிராமப்புற சாலைகள் படுமோசமாக கிடப்பதை கண்டார். ஒரு இடத்தில் சாலையில் நடுவே பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் நிரம்பி நின்றது. இந்த அவலநிலையை பிறருக்கு அம்பலப்படுத்த அவருக்கு ஒரு எண்ணம் உதயமானது.

நடுரோட்டில் தேங்கி நின்ற தண்ணீரில் அவர் படுத்து உருண்டு குளியல் போட்டு அதை படமும் பிடித்தார். பிறகு இங்கிலாந்து திரும்பியது அந்த காட்சியை இணையதளத்தில் வெளியிட்டு தான் கண்ட சாலை அவலங்களையும் விவரித்து கருத்து வெளியிட்டார்.

குண்டும், குழியுமான சாலைகளால் 20 நிமிடத்தில் பயணிக்க வேண்டிய தூரத்தை கடக்க 1¼ மணிநேரத்தை செலவிட்டேன் என்று குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காற்சட்டை அணியாத தினம்: உலகம் முழுவதும் வேடிக்கை
Next post இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு