காற்சட்டை அணியாத தினம்: உலகம் முழுவதும் வேடிக்கை

Read Time:4 Minute, 6 Second

3784_newsthumb_thum
3784No Pants Day (1)‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள்.

படத்தில் இதனை வேடிக்கைக்காக காட்டியிருப்பாhர்கள். ஆனால் நிஜத்திலும் இது போன்று வேடிக்கையான நிகழ்வை வருடாந்த நிகழ்வாக கொண்டாடி சிரிக்க வைக்கின்றார்கள்.

ஜனவரி 12 ஆம் திகதியை ‘No Trousers Day’ (காற்சட்டை அணியாத தினம்) என உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.

2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இத்தினம் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவலடைந்து 13ஆவது வருடாந்த ‘காற்சட்டை அணியாத தினம்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

7 பேர் மட்டுமே கொண்டாடி ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்வில் இம்முறை சிட்னி, பெய்ஜிங், ஹொங்கோங், லண்டன், பாரிஸ், பெர்லின் அமெரிககாவின் பல நகரங்கள் என பல இடங்களில் ‘காற்சட்டை அணியாத தினம்’ பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் நோ பேன்ட் டே என அழைக்கப்பட்டு தற்போது ‘நோ பேன்ட்ஸ் சப்வே ரைட்’ அல்லது ‘நோ ட்ளெஸர்ஸ் டே’ எனவும் கூறப்படுகின்றது.

வழக்கமாக ஒரே பாதையில் பயணிப்பவர்கள் இந்நிகழ்வில் சமூக இணைத்தளங்களினூடாக தொடர்பு கொண்டு தாம் சந்திக்க வேண்டிய இடங்களை தீர்மானித்துக் கொள்வார்கள்.

இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகற்றவர்களாக இருப்பர். நிகழ்வினை ஒருங்கிணைப்பவர்கள் கட்டளைகளை வழங்குவர்.

பின்னர் தீர்மானிக்கின்ற இடத்தில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் காற்சட்டையின்றி சாதரணமாக பத்திரிகை வாசிப்பது, தொலைபேசி பயன்படுத்துவது என அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுவர். இதன்போது உடலின் மேற்பாகதில் முறையாக ஆடை அணிந்து கொள்வர்.

இவ்விடயம் தெரியாமல் இருப்பவர்களை அதிர்ச்சியும் வேடிக்கையும் காண்பிப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கும். இயல்பாக நடந்துகொள்ளும் குறும்புக்காரர்கள் காற்சட்டையை மறந்துவிட்டதாக நினைத்து ஒருவரை ஒருவர் கேட்டு வேடிக்கையாக நட்பு பராட்டுவார்கள்.

வேடிக்கையான கொண்டாட்மாக கூறப்படும் இந்நிகழ்வில் மக்கள் சுழிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் உள்ளாடையின்றி வருவதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டர்கள் தவிர்க்குமாறு கேட்டுள்ளனர்.

‘மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதே எமது நோக்கம் அவர்கள் மீது சிறுநீர் கழிப்பதல்ல’ என அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர கொண்டாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை அணிந்துவரும் உள்ளாடையில் வேடிக்கையான வாசகங்கள் மற்றும் வடிவங்கள் வரவேற்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறி விழுந்த செல்போனை எடுக்க சிக்காக்கோ ஆற்றில் இறங்கியவர் உடல் உறைந்து பலி
Next post நடுரோட்டில் குளியல் போட்டு, ஆசிரியை ஆதங்க போராட்டம்