காதலரை கண்டு பிடிப்பதற்காக, ஊர்மக்களிடம் உதவி கோரிய பெண்

Read Time:1 Minute, 39 Second

3772Virginiaஅமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் விரும்பும் இளைஞரை கண்டுபிடிப்பதற்காக நகரம் முழுவதுமுள்ள மக்களிடம் உதவி கோரியுள்ளார்.

வடக்கு வேர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைச் சேர்ந்த கோர்ட்னி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள இப்பெண் கடந்த மாதம் மதுபான விடுதியொன்றில் வைத்து ‘பென்’ என்ற ஓர் இளைஞரை சந்தித்தாராம். இருவரும் உரையாடி விட்டு பிரிந்து விட்டனர்.

அதன்பின் அந்த இளைஞரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ளத் தவறியதால் அவருடன் மீண்டும் தொடர்புகொள்ள முடியாதிருப்பதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதற்கான விளம்பரங்களை அலெக்ஸாண்ட்ரியா நகரின் பல வீதிகளில் அவர் ஒட்டினார்.

‘பென், டிசெம்பர் 23 ஆம் திகதி நான் தவறான தீர்மானத்தை மேற்கொண்டுவிட்டேன்’ என அதில் கோர்ட்னி குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து பெரும் எண்ணிக்கையான மக்கள் கோர்ட்னியுடன் தொடர்பு கொண்டனர். இறுதியில் பென் எனும் அந்த இளைஞரை கோர்ட்னி கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லண்டனில்.. நடந்த தற்கொலை சம்பவம்: ‘விஸ்கி’ குடித்து விட்டு பிள்ளைகளை கொன்ற தாய்?!!
Next post தவறி விழுந்த செல்போனை எடுக்க சிக்காக்கோ ஆற்றில் இறங்கியவர் உடல் உறைந்து பலி