தேவயானி நிர்வாண சோதனை வீடியோ காட்சி போலியானது : அமெரிக்கா திட்டவட்டம்

Read Time:3 Minute, 48 Second

15-devyani-khobragade-300வாஷிங்டன்: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்திய துணைத் தூதர் தேவயானியின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த வீடியோ போலியானது என்று அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்காவில் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடேவை போலீசார் நடுரோட்டில் கைது செய்து, கை விலங்கிட்டு அழைத்து சென்றனர்.

இதற்கு இந்தியா கடும் எதிர் ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளை அதிரடியாக பறி த்து பதிலடி கொடுத்தது. இதனால், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக சற்று பணிந்த அமெரிக்க அரசு, தேவயானி மீதான வழக்கை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்தபோது அவருடைய ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைத்து, நிர்வாணமாக சோதனையிடுவது போன்ற வீடியோ காட்சிகள், சில இணையதளங்களில் நேற்று வெளியானது.

அதில், ஒரு பெண்ணை தரையில் படுக்க வைத்து, அவருடைய ஆடை களை போலீசார் அவிழ்ப்பதும், அப்போது அந்த பெண் கதறி அழுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த வீடியோ காட்சி போலியானது என்று அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் மேரி ஹார்ப் அளித்த பேட்டியில்,

”இந்தியாவுடனான உறவை பலப்படுத்தும் நடவடி க்கைக்கு அமெரிக்க அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இருநாட்டு உறவில் சமீப காலமாக சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். ஆனால், அது தற்காலிகமானது என்றே அமெரிக்க அரசு உறுதியாக நம்புகிறது.

தேவயானியை நிர்வாணப்படுத்தி சோதனையிடுவது போன்ற வீடியோ வெளியாகி இருப்பதை கேள்விப்பட்டோம். அது போலி என்பதை உறுதியாக கூறுகிறோம்.

அதில் இருக்கும் பெண் தேவயானி அல்ல. அமெரிக்க போலீசார் சோதனை செய்வதில் குறிப்பிட்ட பாணி கடைபிடிக்கப்படுகிறது.

அதுபோன்ற நடைமுறை எதுவும் இந்த வீடியோ காட்சியில் இல்லை. எனவே, அது போலி என்பது உறுதியாகிறது” என்றார்.

தேவயானி வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில், அமெரிக்க கொடியை தீயிட்டு கொளுத்தி, பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் ‘ஆவா’ குழு கைது
Next post வர்த்தகரைக் காணவில்லை என முறைப்பாடு