புதிய கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் துபாய்

Read Time:1 Minute, 54 Second

45ff9a25-1dda-41f2-99d2-b796e54f60e8_S_secvpfவினோதமான சாதனைகள் முதல் பிரம்மிக்கவைக்கும் சாதனைகள் என ஐக்கிய அரபு குடியரசு நாடு இதுவரை கிட்டத்தட்ட 150 உலக சாதனைகளை படைத்துள்ளது. இந்த நாட்டின் ஒரு பகுதியாக விளங்கும் துபாய் பிரதேசம் கின்னஸ் சாதனைகளை குவிக்க துடிக்கும் பகுதியாகும்.

எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த துபாய் நகரம் வரும் புத்தாண்டு தினத்தன்று மிகப்பெரிய அளவிலான வான வேடிக்கை ஒன்றை நடத்தி பழைய வான வேடிக்கை சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக
பாம் ஜுமெரியா பகுதிக்கும் உலகத்தீவுப்பகுதிக்கும் இடைப்பட்ட 100 கிலோ மீட்டர் பரப்புடைய கடல் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்கவர் வானவேடிக்கைக்காக 200 வானவெடிக்கை வீரர்கள் 100 கம்யூட்டர்கள் துணையுடன் 400 இடங்களில் 4 லட்சம் வானவேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளனர். இதில், பறக்கும் பருந்து, 10 கிலோ மீட்டர் அகலமுள்ள சூரிய உதயம், தேசியக்கொடி, வானில் 6 நிமிட வானவேடிக்கை நடன நிகழ்ச்சி என கண்கொள்ளாக் காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

வேடிக்கை பார்க்க வரும் மக்களுக்கும், சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கும் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று துபாய் நிர்வாகம் கூறியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈ.பி.டி.பி மீது களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை
Next post 300 அடி மலைபள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய அதிசய நாய்..!