(PHOTOS) “ஜூனியர் விகடன்” நிருபர் மகா.தமிழ் பிரபாகரன், இலங்கையில் கைது!!

Read Time:5 Minute, 27 Second

maha-1கொழும்பு: ஜூனியர் விகடன் வாரஇதழின் நிருபர் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிராஞ்சி என்ற இடத்திலேயே இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று காலையில் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மகா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்த கிராமங்களுக்குச் செல்லும் வீதியின் மோசமான நிலையினை மகா.பிரபாகரன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனை ராணுவத்தினர் கவனித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அங்குவந்த ராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முழு குழுவினரையும் கைது செய்து ஜெயபுரம் போலீசில் ஒப்படைத்திருந்துள்ளனர்.

மாலை 5 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரை விசாரணை செய்து பின்னர் விடுதலை செய்தனர். ஆனால் நிருபர் மகா. தமிழ்பிரபாகரனை விடுதலை செய்யவில்லை. அவரிடம் தொடர்ந்தும் படையினரும், போலீசாரும் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிகிறது.

கைது செய்யப்பட்ட மகா.தமிழ்பிரபாகரன் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனை உறுதிப்படுத்திய இலங்கையின் போலீஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வந்த ஒருவர் நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய இடங்களை புகைப்படம் எடுத்த காரணத்தாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டங்களை அந்த நபர் மீறினார் என்றும், நாளை மேலதிக நடவடிக்கைக்காக அவரை குடிவரவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைப்பார்கள் என்றும் ரோஹண தெரிவித்தார்.

மகா.தமிழ்பிரபாகரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என்று தெரிவிக்கவில்லை என்றும் கூறும் அஜித் ரோஹண, சுற்றுலா விசாவில் வருபவர்கள் இவ்வகையான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் சுட்டி காட்டினார்.

வட மாகாணத்தில் அதிமுக்கியமான பாதுகாப்பு தொடர்பான இடங்களை படம் எடுக்க வேண்டியத் தேவை ஏற்பட்டது என்றும் கேள்வி எழுப்பினார் அஜித் ரோஹண.

அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள மகா.தமிழ்பிரபாகரன் தனது நண்பர் என்றும், வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை, பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் உட்பட தமது குழுவினருடன் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி, ஜெயபுரம் போன்ற பகுதிகளுக்கு தான் பயணித்த போது, அவரும் உடன்வந்தார் என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள மக்களைச் சந்திப்பதற்காகவும், அவர்களுடன் சில விஷயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும் தாம் சென்றிருந்ததாக சிறீதரன் தெரிவித்தார். இராணுவ முகாம்கள் இருக்கும் பகுதிகளுக்கு தாங்கள் செல்லவில்லை என்றும் அவர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள தனது நண்பர் இதற்கு முன்பும் ஒரு முறை இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் எனவும் சிறீதரன் தெரிவித்தார்.

இதனிடையே நிருபர் மகா.தமிழ்ப் பிரபாகரன், கொழும்பில் உள்ள நான்குமாடி என்று அழைக்கப்படும் தீவிரவாதக் குற்றத்தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நான்குமாடி என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையம், சித்திரவதைக்கும், சட்டவிரோதக் கொலைகளுக்கும் பெயர் பெற்றது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகா. தமிழ் பிரபாகரன் கடந்த ஆண்டும் இலங்கை சென்று இலங்கையின் நிலவரங்களை ஜூனியர் விகடன் இதழில் “புலித்தடம் தேடி” என்ற கட்டுரையாக எழுதியிருந்தார்.

maha-1

maha-2.jpg.

maha-tamil

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிறிஸ்மஸ் தினமான நேற்று விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
Next post 2013-ம் ஆண்டில், ஒரு நாளைக்கு 254 கோடி சம்பாதித்த, சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன்