அரைகுறை ஆடை பார்ட்டி வீடியோ பூனம் பாண்டே அதிர்ச்சி

Read Time:1 Minute, 55 Second

009அரை குறை ஆடையுடன் பூனம் பாண்டே கொண்டாடிய பார்ட்டி வீடியோ ரிலீஸ் ஆனதில் அப்செட் ஆனார். கடந்த 2011ம் ஆண்டு இந்தியா உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே.

இவர் இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவரது ஸ்டைல். இவருக்கே ஷாக் அளிக்கும் வகையில் சமீபத்தில் தனது வீட்டில் நண்பர்கள், தோழிகளுடன் அறைகுறை ஆடையுடன் பார்ட்டி கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகின.

இது பற்றி அறிந்து ஷாக் ஆன பூனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையிலேயே என் மனம் காயம்பட்டிருக்கிறது. மற்றவர்களைப்போல் நானும் எனது தனிப்பட்ட நேரத்தை அனுபவிக்கும் உரிமை இருக்கிறது.

அதை யாராவது மீறி வந்து தலையிட்டால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. டுவிட்டர் நண்பர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு சந்தோஷம் அளிக்கிறது. அதனால் சிலரை பார்ட்டிக்கு அழைத்தேன். அவர்கள் எனது தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டிருப்பது, என்னை அப்செட் ஆக்கி இருக்கிறது என்று பூனம் குறிப்பிட்டிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் அனகொண்டாவை வாந்தியெடுத்த பெண் அனகொண்டா
Next post ஈரானுக்கு எதிராக: ஒபாமாவும் வீட்டோவும்..