மாவீரர் தினத்தில் முருங்கனில் கைதான மூவர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு!

Read Time:2 Minute, 28 Second

arrest-ltteமன்னார் முருங்கன் பகுதியில் மாவீரர் தினமான கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் என எழுதிக் கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்கள் முருங்கன் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மன்னார் நீதிமன்றதத்தில் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர்படுத்தி குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் 14 நாட்கள் விசாரணைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு குறித்த மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO & PHOTOS) பாராளுமன்றத்தில் உள்ளாடையுடன் உரையாற்றிய உறுப்பினரால் பரபரப்பு!
Next post ரஜினியை பிச்சைக்காரரர் என எண்ணி 10 ரூபா ‘பிச்சையிட்ட’ பெண்..!