மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!

Read Time:2 Minute, 38 Second

1444935364kamயாழ். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனை (ரஜீவ்) கொலை செய்யுமாறு பணித்தது அவருடைய மனைவியே என பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

கொலை குறித்து விசாரணை நடத்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.

தனது கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முன்னர் அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.

ஆனால் தனது கணவனை கொலை செய்யுமாறு அவர் பணிப்பு விடுத்ததை அடுத்து வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் மற்றும் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் லண்டன் சசிந்திரன் ஆகியோர் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 09MM வர்க்க துப்பாக்கியும், 11 ரவைகளும் துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வட மாகாண சபை எதிர்கட்சித் தலைவரும் ஈபிடிபி கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரனுக்கும் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு காணப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாருக்கு பொய் தகவல் வழங்கிய நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியனின் மனைவியான றெக்சியன் அனிதாவிடம் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணை மூலம் அனைத்து உண்மைத் தகவல்களையும் பெற்றுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்
Next post நெடுந்தீவு பி.சபை தலைவர் கொலை: வட மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவர் கைது