தன்னை கொன்று உண்ண அனுமதித்த நபர்: குத்திக்கொலை செய்து உண்ட நபர் கைது

Read Time:2 Minute, 37 Second

3206Germanyதன்னை வேறு யாராவது கொன்று சாப்பிட வேண்டும் என ஆசைப்பட்ட நபரொருவரை கொன்று உண்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.

அச்சுறுத்தலான இந்த விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. பெயர் வெளியிடப்படாத 59 வயதான நபரே வேறு ஒருவரால் தான் கொலை செய்யப்பட்டு உண்ணப்பட வேண்டும் என அனுமதித்துள்ளார். இளமைப் பருவத்தில் இருந்து இவருக்கு இவ்வாறானதொரு தீராத ஆசை இருந்துள்ளது.

இதற்காக குறித்த நபர் தன்னை நரமாமிசம் தொடர்பிலான இணையத்தளமொன்றில் பதிவுசெய்துள்ளார். இத்தளத்தினூடாகவே சந்தேக நபரான டெட்லெவ் ஜீ என அறியப்பட்ட கையெழுத்து மற்றும் பத்திரங்கள் ஆய்வாளரான பொலிஸ் உத்தியோஸ்தருக்கும் இறந்தவருக்கும் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாதம் முன்னர் இணையம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இறந்த நபர், ஜேர்மனியின் ஹேனொவர் எனுமிடத்திலிருந்து தன்னை உண்ண விரும்பிய டெட்லெவ்வை சுமார் 400 தூரத்துக்கு பயணம் செய்துள்ளார்.

இறந்தவரை காணவில்லை என நவம்பர் மாதம் 11ஆம் திகதி முறைப்பாடு கிடைத்துள்ளது. இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் இறந்தவரின் பல பாகங்களாக வெட்டப்பட்ட உடற்பாகங்கள் டெட்லெவ்வின் வீட்டுத் தோட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து டெட்லெவ் கைது செய்யப்பட்டுள்ளார். தான் அவரைச் சந்தித்த ஒரு மணி நேரத்தில் தொண்டையில் கத்தியால் குத்தி கொலை செய்ததேன். ஆனால் உண்ணவில்லை என விசாரணையின் போது டெட்லெவ் தெரிவித்துள்ளார்.

தற்போது இறந்தவரின் உடற்பாகங்கள் ஏதாவது தவறியுள்ளதா? அல்லது உண்ணப்பட்டு விட்டதா? என மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

3206Germany

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாவிதன்வெளி பி.ச. உப தவிசாளர் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்தம்
Next post உலகின் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் அமர்ந்து தேசிய கொடியை அசைத்த எமிரேட்ஸ் முடிக்குரிய இளவரசர்