சவூதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

Read Time:1 Minute, 27 Second

sauthiஎண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபிய நாட்டில் இஸ்லாமிய ஷரிய சட்டப்படி கற்பழிப்பு, கொலை, மதஎதிர்ப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், ஹெராயின் போதைப்பொருளை விழுங்கி கடத்த முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

விசாரணையில் பாகிஸ்தானியர் மீதான போதைப்பொருள் கடத்தல் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதன்படி, இன்று தம்மாம் நகரில் அந்த பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தீவிர பழமைவாத முஸ்லீம் ராஜ்ஜியமான சவூதியில் இந்த ஆண்டு இதுவரை மட்டும் 72 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post EPDP நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் சடலமாக மீட்பு
Next post தாயின் இரண்டாவது கணவனால் சிறுவன் அடித்துக் கொலை