ஹிலாரியின் வாகனத்துக்கு லண்டனில் அபராதம்
அமெரிக்க முன்னாள் வெளிவிவகார செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டனின் வாகனம் அனுமதி பெறாமல் தரிக்கப்பட்டிருந்தமைக்காக லண்டன் போக்குவரத்துத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அவருக்கு அபராதச் சீட்டு வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவொன்றில் ஹிலாரி கிளின்டன் பங்குபற்றினார். இதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் சிற்றி பகுதிக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் 5 கார்களில் அவர் வருகை தந்தார்.
ஆவரின் கார் சென் ஜேம்ஸ் சதுக்கப் பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கு வாகனங்களை தரிப்பதற்கு மணித்தியாலத்துக்கு 3.30 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் ஹிலாரின் வாகனம் அனுமதிச்சீட்டு பெறாமல் வாகனம் நிறுத்தியமைக்காக 80 ஸ்ரேலிங் பவுணுக்கான அபாராதச் சீட்டொன்றை போக்குவரத்து உத்தியோகஸ்தர் வழங்கினார்.
அவ்வேளையில் ஹிலாரி கிளின்டன் அங்கிருக்கவில்லை.
அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அது ஹிலாரியின் கார் என்பதை எடுத்துக்கூறி கடுமையாக வாதாடினர்.
ஆனால் சற்றும் பணியாத மேற்படி ஊழியர் அபராதச் சீட்டை வாகனத்தில் வைத்துவிட்டுச் சென்றார்.
மேற்படி ஊழியரின் துணிச்சலை பிரித்தானிய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating