பிரிட்டனின் அணுசக்தித் துறையில் முதலீடு செய்ய சீனா அனுமதி

Read Time:2 Minute, 24 Second

uk-chinaசீனா தனது முதலீடுகளை அதிகரித்துள்ள முதல் பத்து வெளிநாடுகளில் இங்கிலாந்தும் இடம் பெறுகின்றது. எரிசக்தித்துறை, வங்கித்துறை, தேம்ஸ் நீர்வள மேலாண்மை போன்றவை மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களிலும் சீனாவின் முதலீடுகள் அந்நாட்டில் பெருகியுள்ளன.

சீனாவின் அணுசக்தி நிறுவனங்களும் இங்கிலாந்தில் முதலீடு செய்யும் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிலை குறித்து இதுநாள்வரை தெளிவாகத் தெரியாமல் இருந்தது.

தற்போது, இங்கிலாந்தின் நிதி அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் சீனாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தங்கள் நாட்டின் பழமையான அணு ஆலைகளைப் புதுப்பிக்கும் ஒரு பில்லியன் பவுண்டு சீன முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் அவர் கையொப்பம் இட்டுள்ளார்.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் சீனாவின் அணுசக்தித் துறையிலும் இங்கிலாந்தின் பங்களிப்பு இருக்கும் வகையில் இரு நாடுகளுக்கான புரிதலை உடைய ஒப்பந்தமாக இது மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், சீனாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இங்கிலாந்திலும் தங்கள் தொழில் மேம்பாடு குறித்த பயிற்சியினை மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஆரம்பகட்டத்தில் சீனாவின் முதலீடுகள் குறைந்த அளவில் இருக்கும். காலப்போக்கில் பின்னர் புதிய நிலையங்கள் துவக்கப்படும்போது இவற்றின் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு என்று இங்கிலாந்தின் கருவூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யாவில் எரிமலைச் சீற்றம்
Next post சொத்து விபரங்களை சமர்ப்பிக்கத் தவறுவோருக்கு எதிராக வழக்கு