2032ல் பூமி அழியுமா?

Read Time:2 Minute, 45 Second

02539640ae393c01c8ff352c718558a1ஒரு சில தசாப்தங்களில் பூமியுடன் மோதும் அபாயமுள்ள விண்கல் ஒன்றை உக்ரைன் நாட்டு வானியலாளர்கள் அவதானித்துள்ளனர்.

கிரிமீன் தீபகற்பத்தின் விண்வெளி கண்காணிப்பு நிலையத்திலிருந்து அவதானிக்கப்பட்டிருக்கும் இந்த விண்கல் 1,345 அடி விட்டம் கொண்டதென குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 வுஏ 135 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பூமியுடன் மோதினால் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக் கப்பட்டுள்ளது.

இது 2032 ம் ஆண்டு ஓகஸ்ட் 26 ம் திகதி பூமியுடன் மோதுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். ஆனால் இது பூமியுடன் மோதுவதற்கு 63,000 ல் ஒரு வாய்ப்பே உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்கல் பூமியுடன் மோதும் பட்சத்தில் சுமார் 2,500 மெகா தொன் டி.என்.டி. வெடி பொருளின் சக்தி பிறப் பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கண்காணிக்கப்பட்ட இந்த விண்கல்லை ரஷ்யாவின் இரு அவதான நிலையங்கள் மற்றும் இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் நாட்டு வானியலாளர்களும் உறுதி செய்திருப் பதாக ரஷ்ய செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில் பூமி மீதான விண்கல் அச்சுறுத்தலை தடுக்க மனிதன் இன்னும் வலுப்பெறவில்லை என்று ரஷ்ய நாட்டின் சிரேஷ்ட பாதுகாப்பு நிபுணர் இகோர் கொரோசென்கோ எச்சரித்துள்ளார்.

மனிதராகிய நாம் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை தயாரிக்க முடியுமான நிலையில் இருந்த போதும் எமது ராடார்களும் ஏவுகணைகளும் விண் கல்லின் முன் பலமிழந்தே இருக்கின்றன.

விண்கற்கள் வினாடிக்கு பல மைல்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியவை. அவை பல பயணப் பாதைகளை கொண்டிருக்கின்றன.

நாம் இன்று பயன்படுத்தும் ஏவுகணைகளை விடவும் அவை மிக சக்திவாய்ந்தது’ என்று கொரோசென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) கள்ளக்காதல் காதல் ஜோடிக்கு நிர்வாணமாக்கி சித்திரவதை!!
Next post ரஷ்யாவில் எரிமலைச் சீற்றம்