இராணுவம் தொடர்ந்து உதவும்: இராணுவத்தளபதி!

Read Time:2 Minute, 0 Second

slk.armydaya_rathnayakeஇராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பண்ணை பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் இராணுவ வீரர்களுடன் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்களுக்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் மற்றும் நலன்புரி திட்டங்களை இராணுவத்தினர் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். அரசியல், இராணுவத்தின் அதிகாரமல்ல. ஆனால், அது ஜனநாயகத்தை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

அரசியல் வேறுபாடுகளை மறந்து இராணுவத்தினர் தங்களுடைய உதவிகளை முன்னெடுப்பர். பயங்கரவாதத்தை பல தியாகங்களுடன் ஒரு காலத்திற்குள் நாம் நிறைவுக்கு கொண்டுவந்தோம். கடின உழைப்புக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட சமாதானம் நாட்டில் நிலைக்கவேண்டும் என்பதே இராணுவத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வளர்ச்சி முக்கியம் -அமைச்சர் சரத் அமுனுகம!
Next post மூன்று வௌ;வேறு பிரதேசங்களில் புதையல் அகழ்ந்த எழுவர் கைது!!