இலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞர் குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவ இளவரசர் சார்ள்ஸ் முன்வருகை!

Read Time:2 Minute, 3 Second

2519Charlesஇலங்கையில் கொல்லப்பட்ட பிரித்தானிய இளைஞரான குரம் ஷேக்கிற்கு நீதி கிடைப்பதற்கு உதவுவதற்கு இளவரசர் சார்ள்ஸ் முன்வந்துள்ளதாக பிரிட்டனின் த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

32 வயதான குரம் ஷேக் 2011 ஆம் ஆண்டு இலங்கையில் தனது ரஷ்ய காதலியுடன் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது தங்காலையில் குழுவொன்றினால் கொல்லப்பட்டதுடன் அவரின் காதலி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனவும் குரம் ஷேக்கிற்கு நீதி வழங்கப்பட வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இவ்விடயத்தில் நீதி கிடைப்பதற்கு பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உதவ முன்வந்துள்ளதாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இம்மரணம் தொடர்பான விசாரணையில் தெளிவான முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோனை பித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சிமோன் டன்க்ஸுக்கு வலியுறுத்தியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் கலந்துரையாடவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் சில தினங்களுக்குமுன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களவாடப்பட்ட பொருட்களை 48 மணிநேரத்தில் கண்டுபிடித்து சாதனை!
Next post சிறுமி வாவியில் மூழ்கி உயிரிழப்பு!!