யாழ். ஆலயத்தில் 150 பவுண் தங்க நகைகள் திருட்டு!!

Read Time:4 Minute, 53 Second

stol.tembleவர­லாற்றுச் சிறப்­பு­மிக்க யாழ். பொன்­னாலை வர­த­ராஜப் பெருமாள் ஆல­யத்தில் புதன்­கி­ழமை இரவு அல்­லது நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை பாரிய திருட்டுச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

கூரை ஓடு­களைப் பிரித்து உள்­நு­ழைந்த திரு­டர்கள் அங்கு பெட்­ட­கத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த 150 பவுண் வரை­யான தங்க நகை­களை திருடிச் சென்­றுள்­ளனர்.

அத்­துடன் சுவா­மிக்கு சாத்­தி­யி­ருந்த வெள்ளி அங்­கி­களும் திரு­டப்­பட்­டுள்­ளன. திரு­டப்­பட்­டுள்­ள­வற்றின் பெறு­மதி சுமார் ஒரு கோடி ரூபா என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த திருட்டுச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­ வ­ரு­வ­தா­வது,

புதன்­கி­ழமை நள்­ளி­ரவு அல்­லது நேற்று வியா­ழக்­கி­ழமை அதி­காலை மேற்­படி ஆல­யத்தின் மடப்­பள்ளிக் கூரை வழி­யாக உள்­நு­ழைந்த திரு­டர்கள் அந்த அறையின் கத­வு­களை உடைத்து ஆல­யத்­தினுள் நுழைந்­துள்­ளனர். பின்னர் களஞ்­சி­யத்தின் கத­வு­களை உடைத்து உட்­சென்று அங்­கி­ருந்த குளிர்­பா­னங்­களை பரு­கி­யதுடன் பிஸ்கட் என்­ப­வற்­றையும் சாப்­பிட்­டுள்­ளனர்.

அந்த அறை­யி­லி­ருந்த மண்­வெட்டி, அல­வாங்கு போன்ற ஆயு­தங்­களை எடுத்துச் சென்று ஆலய மூலஸ்­தா­னத்­திற்குச் செல்லும் கதவை உடைத்து எழுந்­த­ருளி மண்­ட­பத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த பெட்­ட­கத்தை உடைத்து அதற்­குள்­ளி­ருந்த 150 பவுண் வரை­யான நகை­களைத் திரு­டி­யுள்­ளனர்.

குறித்த பெட்­ட­கத்­திற்கு ஏறக்­கு­றைய எட்டு வரை­யான பூட்­டுக்கள் போடப்­பட்­டி­ருந்­தது. அத்­தனை பூட்­டுக்­க­ளையும் உடைத்து பெட்­ட­கத்தை திறந்தே நகை­களைத் திரு­டி­யுள்­ளனர். திரு­விழாக் காலங்­களில் சுவா­மிக்கு சாத்­து­கின்ற அத்­தனை நகை­களும் திரு­டப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் ஸ்ரீதேவி, பூமா­தேவி சமேத நாரா­யணப் பெரு­மா­னுக்கு சாத்­தப்­பட்­டி­ருந்த மூன்று வெள்ளி அங்­கி­களும் திரு­டப்­பட்­டுள்­ளன.

மேலும் ஆல­யத்­தி­லி­ருந்த உண்­டி­யல்­களும் உடைக்­கப்­பட்டு அதற்­குள்­ளி­ருந்த பணமும் திரு­டப்­பட்­டுள்­ளது.

திரு­டர்கள் மிக நீண்ட நேரம் ஆல­யத்­திற்குள் இருந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கின்­றது. ஆல­யத்தின் உள் மண்­ட­பத்தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏணி மணிக்­கோ­பு­ரத்­தினுள் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதனால் நகை­களைத் திரு­டிய பின்னர் திரு­டர்கள் மணிக்­கோ­புர வழி­யாக ஏறித் தப்பிச் சென்­றி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது.

நேற்றுக் காலை வழ­மை­யான பூசைக்­காக ஆல­யத்­திற்குச் சென்ற அர்ச்­சகர் ஆல­யத்தின் உள் கத­வுகள் உடைக்­கப்­பட்­டுள்­ள­த­னையும் நகைகள் திரு­டப்­பட்­டுள்­ள­த­னையும்; கண்டு ஆலய பரி­பா­லன சபைக்கு அறி­வித்­ததைத் தொடர்ந்து இது தொடர்­பாக வட்­டுக்­கோட்டைப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.

ஆல­யத்­திற்கு வந்த பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். தொடர்ந்து ஆல­யத்­திற்குள் எவரும் செல்ல வேண்­டா­மென்று தெரி­வித்­துள்ள பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த 1987 ஆம் ஆண்டும் இந்த ஆலயத்தில் இதே போன்றதொரு பாரிய திருட்டு இடம்பெற்றது. இதன்போது பல லட்சக்கணக்கான ரூபா பெறுமதியான நகைகளும் பொருட்களும் திருடப்பட்டிருந்தன. அப்போது இவ்வாலயத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து திருட்டு இடம்பெற்றிருந்தது.

stol.temble

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post லொறிக்குள் ஏறி 18 வெங்காய மூடைகளை திருடி, விற்பனை செய்ய முயற்சித்த போது கைது!
Next post தாயின் நகையை ஈடு வைத்து, ஹெரோய்னுக்கு செலவிட்ட மகன் கைது!!