ஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!!

Read Time:2 Minute, 17 Second

download (5)பெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த ஒரு பகுதியை உருவாக்கி வருகின்றனர்.

தற்போது அந்தப் பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்ததுபோன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.

இதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன். நோபிளிச் கூறுகின்றார். மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும்.

கல்லீரல், இதயத் திசு போன்றவற்றை ஏற்கனவே விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள போதிலும், மூளை உருவாக்கம் போன்ற நுண்ணிய செயல்பாடுகள் அவற்றில் கிடையாது. விஞ்ஞான உலகின் கணிப்பின்படி, இன்றைய தேதியில் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் உடல் உறுப்புகளில், மூளையின் உருவாக்கமே மிகவும் சிக்கலானது என்று கருதப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14ம் ஆண்டு நினைவு நாள்! (தோழர் மாணிக்கதாசன் -உபதலைவரும், இராணுவத் தளபதியும் -புளொட்) -.அஞ்சலி அறிவித்தல்..!!
Next post நவீன உளவு செயற்கைகோளை அமெரிக்கா ரகசியமாக விண்ணில் ஏவியது..!!