மெட்ராஸ் கபேக்கு எதிராக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாகிறது..!!

Read Time:1 Minute, 50 Second

images (2)இந்தியில் தயாரான மெட்ராஸ் கபே படத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்தன. தமிழகத்தில் இப்படம் ரிலீசாகவில்லை.

‘மெட்ராஸ் கபே’ படத்துக்கு போட்டியாக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தமிழில் சினிமா படமாக எடுக்கப்படுகிறது.

இப்படத்தை வ.கௌதமன் இயக்குகிறார். இவர் ”மகிழ்ச்சி” படத்தை டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்தார்.

பிரபாகரன் படம் பற்றி அவர் கூறியதாவது:–

ராஜாராஜசோழனுக்கு பிறகு தமிழனின் வீரத்தையும், மானத்தையும் தலைநிமிர செய்த பெருமை அண்ணன் பிரபாகரனையே சாரும்.

அவர் வாழ்க்கையை நெடுமாறன் எழுதிய ஆவண புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைப்படமாக எடுக்கிறேன்.

பிரபாகரனின் தியாகம், இலங்கையில் மூன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கடல் பகுதியில் சிங்கள படைகள் சுற்றி வளைத்ததும், பிரபாகரன் என்ன முடிவு எடுத்தார் என்பன போன்ற விவரங்கள் படத்தில் இருக்கும்.

பிரபாகரன் கேரக்டரில் தமிழன் ஒருவரே நடிப்பார். பிரேவ் ஹார்ட், உமர்முக்தார் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இப்படம் உருவாகும். தமிழர்கள் பெருமை கொள்ளும் படமாக இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம் முதியவர் கைது..!!
Next post தாய், தந்தையுடன் குளித்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!